வடக்கு
யாழில் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய ஹயஸ்

Oct 27, 2025 - 09:56 AM -

0

யாழில் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய ஹயஸ்

யாழ்ப்பாணம் - தட்டாதெரு பகுதியில் ​நேற்று (26) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் இடது பக்கத்தால் சென்றவேளை எதிர் திசையில் இருந்து வந்த ஹயஸ் ரக வாகனமானது தனது பக்கத்தை விட்டு விலகி வலது பக்கமாக சென்று மோட்டார் சைக்கிள் மீது மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்ததுடன் விபத்தினை ஏற்படுத்திய ஹயஸ் ரக வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

விபத்து சம்பவம் குறித்தான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05