Oct 27, 2025 - 10:22 AM -
0
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன பிள்ளைகள் விழாவில் முறிகண்டி திருச்சபை பல கிண்ணங்களை தனதாக்கியது.
13 வயதுப் பிரிவு வேதாகம புதிர் போட்டியில் வட்டுக்கோட்டை திருச்சபையை 19 க்கு 04 எனும் புள்ளியில் வென்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகி உசன் திருச்சபையுடன் இறுதிப் போட்டிக்கு தெரிவானது.
இறுதிப் போட்டியில் 16க்கு 05 எனும் புள்ளியில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்து கிண்ணத்தை தமதாக்கினர். இரண்டாம் இடத்தை உசன் திருச்சபையும், மூன்றாம் இடத்தை வட்டுக்கோட்டை திருச்சபையும் பெற்றது.
குழுப்பாடல் பாடல் போட்டியில் முதல் இரண்டு இடங்களையும் வட்டுக்கோட்டை திருச்சபையும், உடுவில் திருச்சபையும் பெற்றுக் கொண்டதுடன், 3 ஆம் இடத்தை முறிகண்டி திருச்சபை பெற்றுக் கொண்டது.
மேலும் 19 வயதுப் பிரிவு தனிப்பாடல் போட்டியில் முதல் இடத்தை உடுவில் திருச்சபையும், 2ம் 3ம் இடங்களை முறிகண்டி திருச்சபையும் பெற்றதுடன், 10 வயதுப் பிரிவில் 2 ஆம் இடத்தை பெற்று கிண்ணத்தை தனதாக்கியது.
மேலும், பேச்சு போட்டியில் 2 ஆம் இடம் பெற்று கிண்ணத்தை சுவீகரித்ததுடன், சித்திரம் உள்ளிட்ட பல போட்டிகளிற்கான வெற்றிச் சான்றிதழ்களையும் பெற்று முறிகண்டி திருச்சபை வென்றது.
வெற்றிக் கிண்ணங்களை பேராயர், உடுவில் மகளீர் கல்லூரி அதிபர் உள்ளிட்ட விருந்தினர்கள் வழங்கி கெளரவித்தனர்.
--

