வடக்கு
தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் 02 ஆம் இடம் பெற்ற பெண்கள் அணி!

Oct 27, 2025 - 10:32 AM -

0

தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் 02 ஆம் இடம் பெற்ற பெண்கள் அணி!

35 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியின் வலைப்பந்தாட்ட போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளன. 

கம்பஹா, வட்டிப்பொல உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஆண்களுக்கான இறுதி போட்டியில், இரத்தினபுரி அணியுடன் மோதிய யாழ்ப்பாண அணி 19 இற்கு 18 எனும் புள்ளி அடிப்படையில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது. 

அதனை தொடர்ந்து குறித்த விளையாட்டரங்கில் இடம்பெற்ற பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில், குருநாகல் அணியுடன் மோதிய யாழ்ப்பாண அணி 41 இற்கு 26 எனும் புள்ளி அடிப்படையில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05