Oct 27, 2025 - 11:12 AM -
0
பொகவந்தலாவை கல்கந்த தோட்டப் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரும் அவரின் மனைவியும் கால்நடைக்கு புல் அறுப்பதற்காக எல்டப்ஸ் பகுதியில் உள்ள தேயிலை மலைப் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, கற்பாறை ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தாக்கியதில் காயங்களுக்கு உள்ளான அவர், பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பத்தில் 69 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--

