மலையகம்
பொறியில் சிக்கிய சிறுத்தை புலியை மீட்கும் பணிகள்

Oct 27, 2025 - 04:10 PM -

0

பொறியில் சிக்கிய சிறுத்தை புலியை மீட்கும் பணிகள்

லிந்துல நாகசேன டெலிகுட்டி தோட்டத்திற்கு அருகே உள்ள காட்டில் அமைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கிய சிறுத்தை புலியை மீட்கும் பணிகள் இன்று (27) காலை 11:30 மணியளவில் ஆரம்பமாகியது. 

சிறுத்தை புலி சிக்கியிருப்பதைக் கண்ட தோட்ட அதிகாரிகள் உடனடியாக லிந்துல பொலிஸாருக்கும், நுவரெலியா வனவிலங்கு அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த வனவிலங்கு அதிகாரிகள் மீட்புப் பணிகளைத் ஆரம்பித்தனர். 

இரண்டு வயது மதிக்கத்தக்க இந்தப் சிறுத்தை புலிக்கு, வனவிலங்கு கால்நடை மருத்துவர் வந்த பிறகு மயக்க மருந்து கொடுத்து மீட்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதேவேளை, ரந்தெனிகல வைத்தியசாலையில் இருந்து வைத்தியர் வருகை வந்தவுடன் குறித்த சிறுத்தை புலிக்கு சிகிச்சை மேற்கொள்ள ரந்தெனிகல வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல இருப்பதாக நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். 

குறித்த பொறி காட்டுப்பன்றிக்காக விரிக்கப்பட்டிருக்கலாம் என நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை லிந்துல பொலிஸாரும், நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05