Oct 28, 2025 - 01:56 PM -
0
எம் நாட்டின் சின்னஞ் சிறுவர்கள் கற்றல் மற்றும் புத்தக வாசிப்பு மீது கொண்டுள்ள ஆர்வத்தை மேம்படுத்துவதையும் தேசத்தின் எழுத்தறிவினை உயர் மட்டத்தில் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு செலான் வங்கியால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'செலான் பெஹெசர' நூலக செயற்திட்டமானது மேலுமொரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் செலான் பெஹெசர தனது 286 ஆவது கிளையை ஒக்டோபர் 14 ஆம் திகதி தம்புள்ளை தித்தவெல்கொல்ல கனிஷ்ட வித்தியாலத்தில் திறந்து வைத்தது.
ஐந்து நாட்கள் இடம்பெற்ற செலான் பெஹெசர வாரம் சிறுவர்களின் படைப்பாற்றல் புத்தாக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளை கொண்டிருந்ததோடு நிதி முகாமைத்துவ விழிப்புணர்வு அமர்வுகளையும் உள்ளடக்கியிருந்தது.
'செலான் பெஹெசர' செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதே 2026 ஆம் ஆண்டளவில் 300 செலான் பெஹெசர நூலகங்களை திறந்து வைப்பதனை இலக்காகக் கொண்டிருந்தது. 286 ஆவது நூலகத்தை தம்புள்ளை தித்தவெல்கொல்ல கனிஷ்ட வித்தியாலத்தில் அமைத்தமை ஊடாக அந்த இலக்கினை நோக்கிய இன்னுமொரு அடியை எடுத்து வைக்க செலான் வங்கியால் முடிந்துள்ளது.
கல்வி அமைச்சின் ஒத்துழைப்போடு இதுவரை செலான் பெஹெசர பாடசாலை நூலக செயற்திட்டமானது தொடர்ந்து பன்னிரண்டு வருடங்களுக்கும் அதிக காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கை மாணவ மாணவிகளின் எழுத்தறிவினை விருத்தி செய்தவாறு அவர்களின் மத்தியில் புத்தகங்கள் மீதும் வாசிப்பின் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்தியவாறு புத்தகம் வாசித்தல் எனும் மகத்தான ஒரு பழக்கமானது கற்றலுக்கு உதவுவதை சாத்தியமாக்கியவாறு வாசிப்பின் ஊடாக அறிவு மிகுந்த ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்புவதே அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கியின் நோக்கமாகும். அந்த வகையில் பாடசாலை நூலகமொன்றை அமைத்தல் அல்லது புதுப்பித்தல் ஊடாக அவ்வாறே உரிய குறித்த பாடசாலைக்கு அத்தியாவசியமான மற்றும் பற்றாக்குறையாக காணப்படும் உபகரணங்கள் மற்றும் வளங்களையும் பெற்றுத்தந்துரூபவ் குறித்த பாடசாலையின் மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருதல் என்பன செலான் வங்கியால் முன்னெடுக்கப்படும்.
அத்தோடு செலான் பெஹெசர இனது 286 ஆவது நூலகம் தொடர்பாக அடையாள புத்தக வெகுமதிகள் தித்தவெல்கொல்ல கனிஷ்ட வித்தியாலயத்திற்கு இரண்டு மடிக்கணணிகள் மற்றும் பல்லூடக படங்காட்டும் கருவி விசாலமான திரை உட்பட தொழினுட்ப வசதிகளும் வழங்கி வைக்கப்பட்டு பிரதம அதிதிகளின் கரங்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
'2026 ஆம் ஆண்டளவில் முழுமையான பாடசாலை நூலகங்கள் 300 ஐ கட்டியெழுப்புவதே செலான் பெஹெசரவின் பிரதான நோக்கமாகும். இவ்வாறாக திறந்து வைக்கப்படும் ஒவ்வொரு பாடசாலை நூலகமும் எதிர்காலத்தில் தலைமுறை தலைமுறைகளாக ஆயிரக்கணக்கான சிறுவர்களின் அறிவினை மேம்படுத்தும் என்பது எமது நம்பிக்கையாகும்.
எதிர்காலத்தைப் பொறுப்பேற்கக் காத்திருக்கும் எமது சிறுவர்களின் வாசிப்பு மீதான ஆர்வத்தை விருத்தி செய்து அவர்களை அறிவு மற்றும் விழிப்புணர்வோடு பலப்படுத்தி அவற்றின் ஊடாக உயர்ந்த எழுத்தறிவு கொண்ட எதிர்கால தலைமுறை ஒன்றைக் கட்டியெழுப்புவது நாம் மேற்கொள்ள வேண்டிய சமுதாய கடமை என நாம் நம்புகின்றோம். இந்த முயற்சிகளின் ஊடாக அறிவு மற்றும் விழிப்புணர்வால் வளம்பெற்ற புதியதோர் இலங்கை உருவெடுப்பதை பார்ப்பது எம் அனைவரதும் பிரார்த்தனையாகும்.' என செலான் வங்கியின் உதவிப் பொது முகாமையாளர் (நிதி) சனுக ஜயரத்ன அவர்கள்ரூபவ் செலான் பெஹெசர 286 ஆவது பாடசாலை நூலகத்தை திறந்து வைக்கும் இந்த தருணத்தில் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
இதன் இடையில் தித்தவெல்கொல்ல கனிஷ்ட வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்படும் செலான் பெஹெசர செயற்திட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்ட வித்தியாலயத்தின் அதிபர் டப்.எம். வத்சலா தீபானி வர்ணகுலசூரிய அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார். 'நாம் சிறந்ததொரு நாளைய தினத்தை எதிர்பார்த்தால் அதற்கான எதிர்பார்ப்பை விதைக்க வேண்டியது எமது பிள்ளைகள் இடத்திலேயே. அவ்வாறே எமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக எமது பிள்ளைகளுக்கு பயிற்சியளிக்கும் பொறுப்பும் எம்மையே சாரும். செலான் பெஹெசர வேலைத்திட்டத்தின் ஊடாக புதுப்பிக்கப்படும் இந்த பாடசாலை நூலகம் எமது பாடசாலைக்கு பெற்றுத்தரப்பட்ட கணணிகள் பல்லூடக இயந்திரம் உட்பட இந்த தயவான நன்கொடைகள் முக்கியத்துவம் பெறுவது மேற்குறிப்பிட்ட காரணத்தினாலேயே ஆகும். செலான் பெஹெசர செயற்;திட்டம் தொடர்பாக நாம் மனப்பூர்வமாக நன்றியோடு இருக்க வேண்டியது அதனாலேயே ஆகும்.'
தித்தவெல்கொல்ல கனிஷ்ட வித்தியாலயத்தின் திறந்து வைப்போடு இணைந்ததாக 'செலான் பெஹெசர வாரம்' இடம்பெற்றது. ஒக்டோபர் 08 ஆம் திகதி 'செலான் பெஹெசர வாரம்' ஆரம்பித்ததோடு ஐந்து நாட்கள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளோடு செலான் பெஹெசர வாரம் நடைபெற்று முடிவடைந்தது. பெஹெசர வாரத்தின் முதலாவது நாளில் இருந்து சிறுவர்களுக்கான சித்திரப் போட்டி மற்றும் கிரிக்கட் போட்டி என்பன இடம்பெற்றன. பெஹெசர வாரத்தின் மூன்றாவது நாளில் எதிர்கால தொழில் முயற்சியாளர்களை உருவாக்கிடும் அடையாளமாக பாடசாலை பிள்ளைகளின் புத்தாக்க உணவுத் தயாரிப்புகளோடு உணவுக் கண்காட்சி ஒன்றும் நடைபெற்றது. அவ்வாறே பெஹெசர வாரத்தின் நான்காவது நாளில் பிள்ளைகள் மற்றும் பெற்றோரின் நிதி முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை பெற்றுத் தருவதற்காக நிதிசார் அறிவுக்கான வேலைத்திட்டம் ஒன்றும் இடம்பெற்றது. பெஹெசர வாரம் நிறைவடைந்த ஐந்தாவது நாளில் பாடசாலை நூலகம் திறந்து வைக்கப்பட்டதோடு நாளின் இறுதியில் இடம்பெற்ற விருது வழங்கல் நிகழ்வில் 'செலான் பெஹெசர வாரம்' முழுவதும் தங்களது திறமையை வெளிப்படுத்திய வெற்றியாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த 286 ஆவது செலான் பெஹெசர நூலகத்தின் திறந்து வைத்தல் வைபவத்திற்கு பிரதம அதிதிகளாக செலான் வங்கியின் வடமத்திய வலயத்தின் பிரதேச முகாமையாளர் ஜனந்த ரத்நாயக்க அவர்கள் மற்றும் கல்வித் திணைக்களத்தின் வலயக் கல்விக் காரியாலய பணிப்பாளர்ரூபவ் ரஞ்சித் சிறிவர்தன அவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அவ்வாறே பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி டப்.எம். வத்சலா தீபானி வர்ணகுலசூரிய அவர்கள் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள்ரூபவ் செலான் வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் முகாமையாளர் (வர்த்தகநாம விற்பனை) விசாகன் ஞானசுந்தரம் மற்றும் பிரதான விற்பனை முகாமையாளர் நளின் கருணாரத்ன ஆகியோர் இந்த சந்தர்ப்பத்தில் பங்கேற்றிருந்தனர்.
நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து வரும் உலகை எதிர்கொள்வதற்காக இலங்கையின் எதிர்காலத் தலைமுறையான எமது பிள்ளைகளை அறிவு மற்றும் விழிப்புணர்வோடு தயார் செய்வதற்காக நாம் கொண்டுள்ள பொறுப்பை செலான் வங்கி நன்கு அறிந்து கொண்டுள்ளது. அந்த வகையில் செலான் பெஹெசர பாடசாலை நூலக செயற்திட்டமானது 2013 மார்ச் 01 ஆம் திகதி அனுராதபுரம் ஸ்வர்ணபாலி பாலிகா மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானதோடு அது முதலாக தொடர்ந்து நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளை தழுவியதாக இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
