கிழக்கு
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு!

Oct 28, 2025 - 02:01 PM -

0

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு!

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்திலுள்ள கோமாரியிலுள்ள களுகொள்ளவில் இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையத்தை இன்று (28) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்ததோடு பாவணைக்காக மக்களிடம் கையளிக்கப்பட்டது. 

கோமாரி மக்கள் தமது குடிநீர் வசதிகளை செய்து தருமாறு இந்திய அரசிடம் கோரியதற்கு அமைய, நீண்டகாலமாக குடிநீர் இன்றி பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் களுகொள்ள பிரதேசத்தில் சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டத்தின் கீழ் பல இலட்சம் ரூபா பெறுமதியான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றையும் அந்த பகுதியில் பஸ் தரிப்பு நிலையம் ஒன்றையும் இந்திய மக்களின் நிதி பங்களிப்புடன் புனர்நிர்மானம் செய்தனர். 

இதில் பிரதம அதிதியாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாராளுமன்ற உறுப்பினர், பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு நாடா வெட்டி திறந்து வைத்ததுடன் பெயர் பலகைகளை திரை நீக்கம் செய்து திறந்து வைத்தனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05