Header Logo
Mogo Academy

வணிகம்
ஒருங்கிணைந்த வர்த்தகநாம மாற்றத்தைக் கொண்டு வர Mark and Comm நிறுவனம் Meridian Creative Solutions உடன் பங்குடைமையில் இணைகிறது

Oct 28, 2025 - 02:20 PM -

0

ஒருங்கிணைந்த வர்த்தகநாம மாற்றத்தைக் கொண்டு வர Mark and Comm நிறுவனம் Meridian Creative Solutions உடன் பங்குடைமையில் இணைகிறது
Mobitel inner

இலங்கையின் முன்னணி சிறிய, சிறப்பு வாய்ந்த மக்கள் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு நிறுவனமான Mark and Comm (Pvt) Ltd, தற்போது Meridian Creative Solutions நிறுவனத்துடன் மூலோபாய பங்குடைமை ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒத்துழைப்பானது ,நவீன வர்த்தகநாம உருவாக்கத்தின் முழுமையான பரப்பை அதாவது பெயர் மதிப்பு மூலோபாயத்திலிருந்து தொழில்நுட்ப செயலாக்கம் வரை உள்ளடக்கும் வகையில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த சேவைகளை விரிவுப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த பங்குடைமையின் மூலம், Mark and Comm நிறுவனத்தின் 14 வருடங்களுக்கு மேற்பட்ட மூலோபாயத் தொடர்பாடல், வர்த்தகநாம நிலைநிறுத்தம், இடர் முகாமைத்துவம், நிறுவன உறவுகள் மற்றும் ஊடக உறவுகள் குறித்த நிபுணத்துவம், Meridian நிறுவனத்தின் தனிப்பயன் மென்பொருள் அபிவிருத்தி, UI/UX வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் சூழல் கட்டமைப்பில் உள்ள திறன்களுடன் இணைகிறது. இதன் மூலம், வர்த்தகநாம கதை சொல்லல் மற்றும் டிஜிட்டல் திறன் இடையே காணப்படும் முக்கிய இடைவெளியை தீர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த தீர்வு வழங்கப்படுகிறது. 

வர்த்தகநாமத்தின் அங்கீகாரம் மற்றும் டிஜிட்டல் உள்ளகக்கட்டமைப்பு என்பன இனி இரு தனித்த பாதைகள் அல்ல — அவை ஒன்றையொன்று சார்ந்தவை ஆகும் ,” என்று Mark and Comm நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தன்சில் தாஜுதீன் தெரிவித்தார். “நிறுவனங்களுக்கு, அவர்களின் கதையையும் நோக்கத்தையும் பிரதிபலிக்கும் தளங்கள், வர்த்தகநாமத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அமைபுகள், மற்றும் அதன் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் டிஜிட்டல் அனுபவங்கள் தேவைப்படுகின்றன. இந்த பங்குடைமையானது அந்த தொடர்ச்சியை வழங்குகிறது.” 

இந்த பங்குடைமைக்கு , Mark and Comm நிறுவனம் தனது PR வழிநடத்தப்பட்ட சிந்தனைகள் மற்றும் மூலோபாயங்களுக்கான நம்பிக்கைக்குரிய நாமத்தையும் , அதன் சர்வதேச வலையமைப்பையும் கொண்டு வருகிறது. — இதில் GlobalCom PR Network-இன் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள இணைப்புகள், PRCA APAC பெருநிறுவன அங்கத்துவம், மற்றும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் உள்ள திறந்த கூட்டுறவுகள் என்பன அடங்கும். 

Meridian Creative Solutions நிறுவனம், அடுத்த தலைமுறை அபிவிருத்தி, தொடரேடு , அடுத்த தலைமுறை இணைய [Web3] அபிவிருத்தி, தனிப்பயனாக்கப்பட்ட, நிறுவன வள திட்டமிடல் [ERP] வாடிக்கையாளர் உறவு முகாமைத்துவம் [CRM ] மற்றும் விற்பனை புள்ளி [POS] அமைப்புகள் ஆகிய துறைகளில் நிரூபிக்கப்பட்ட மேம்பட்ட பொறியியல் திறன்களை வழங்குகிறது. இதனுடன் UI/UX வடிவமைப்பு, வர்த்தகக்குறியிடல், விளக்கப்படங்கள் மற்றும் பொதி வடிவமைப்பு (packaging design) குறித்த நிபுணத்துவமும் இணைக்கப்பட்டுள்ளது. 

“அதை நிறைவேற்றும் அடித்தளம் இல்லாத மூலோபாயமானது கோட்பாடாகவே இருக்கும்; 

வர்த்தகநாம நோக்கமில்லாத தொழில்நுட்பம் வெறும் இயந்திரமாக மாறும்,” என்று Meridian Creative Solutions நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பிரதம உற்பத்தி அதிகாரியுமான விராஜ் அதிஹெட்டி கூறினார். “இந்தபங்குடைமையானது , வர்த்தகநாமங்கள் வலுவான, நிலையான டிஜிட்டல் இருப்பை உருவாக்க உதவும் வகையில், சிறந்த நாம உத்தியை டிஜிட்டல் திறனுடன் இணைத்து, பிளவுகளைப் பாலமாக மாற்றுகிறது. 

Meridian Creative Solutions நிறுவனமமானது SOZO Beverages, Rank Holdings, Geoffrey Bawa Trust, Hemsons International, மற்றும் Moose Clothing Company போன்ற பிரபலமான நிறுவனங்களை உள்ளடக்கிய வாடிக்கையாளர் தொகுப்புடன், மேலும் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பெற்ற திட்ட அனுபவத்துடன், தனித்தன்மையுடன் காணப்படும், தொழில்நுட்ப ரீதியாக வலிமையான டிஜிட்டல் சூழல் அமைப்புகளை வழங்குகிறது. இந்நிறுவனமானது தன்னுடைய தனிப்பட்ட தளங்களை ஆடை உற்பத்தி மற்றும் சில்லறை முகாமைத்துவ துறைகளுக்காகவும், மேலும் பயணம் மற்றும் அனுபவ சேவை வழங்குநர்கள் பயன்பாட்டிற்காகவும் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நிறுவனமானது, துறை சார்ந்த ஆழமான புரிதலை அளவுகோல் செய்யக்கூடிய டிஜிட்டல் தயாரிப்புகளாக மாற்றும் தன்னுடைய திறனை வெளிப்படுத்துகிறது. 

இந்தப்பங்குடைமையானது, தொழில்முறை சேவைகளின் பரந்த பரிமாணங்களில் காணப்படும் ஒரு முக்கியமான மாற்றத்தை பிரதிபலிக்கிறது — அங்கு தொடர்பாடல், சந்தைப்படுத்தல், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கிடையேயான பாரம்பரிய செயல்பாட்டு எல்லைகள் வேகமாக மங்கிவருகின்றன. இதற்குப் பதிலாக, நவீன வர்த்தக சவால்கள் தனித்தனி தீர்வுகளை எதிர்க்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த அணுகுமுறைகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. 

இந்தப்பங்குடைமையானது, டிஜிட்டல் மாற்றத்தை மேற்கொள்ளும் பாரம்பரிய வர்த்தகநாமங்கள், முழுமையான ஒருங்கிணைந்த தீர்வுகளை தேடும் வளர்ச்சி நிலையில் உள்ள நிறுவனங்கள், மற்றும்பிராந்திய சந்தையில் மூலோபாயத்துடனும் தொழில்நுட்ப அடித்தளத்துடனும் நுழைய விரும்பும் சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றுக்கு சேவை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara