Oct 28, 2025 - 02:23 PM -
0
வாழ்க்கையை மேம்படுத்துவது மற்றும் சமூகங்களை வலுவூட்டுவதில் உறுதிப்பாட்டைக் கொண்டுள்ள செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம், திகண மறுவாழ்வு வைத்தியசாலையில் விசேட தேவை உடைய சிறுவர்களுடன் இணைந்து உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடியது.
ஒவ்வொரு சிறுவரும் மதிப்பு மிக்கவர்களாக உணர்வதற்கும், கொண்டாடப்படுவதற்கும், ஒத்துழைப்பு வழங்கப்படுவதற்கும் உரியவர்கள் என செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் நம்புகின்றது. உலக சிறுவர் தினத்தில் குழந்தைகளின் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் கௌரவித்து, அவர்களின் பயணத்திற்குப் பங்களிப்புச் செய்வதற்கும், அவர்களின் குடும்பங்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்குமான சிறப்புரிமையை நிறுவனம் பெற்றுக் கொடுத்தது.
கேகாலை மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்ட நிகழ்வு, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவர்களின் மீள்தன்மை, படைப்பாற்றல் மற்றும் திறமைகளை அங்கீகரிப்பதற்காக மனமார அர்ப்பணிக்கப்பட்ட சந்தர்ப்பமாக அமைந்தது. விசேட தேவையுடைய சிறுவர்களின் பெற்றோருடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, உலக சிறுவர் தினம் அடையாளப்படுத்தும் ஒற்றுமை மற்றும் கருணை உணர்வுக்கான எடுத்துக்காட்டாகவும் அமைந்தது.
இந்த நிகழ்ச்சியின் ஓர் அம்சமாக சிறுவர்கள் தமது தனித்துவமான திறமைகளை நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தினர். இதன் ஊடாக ஒவ்வொரு சிறுவரும் தமக்குள் எல்லையற்ற ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்பது அனைவருக்கும் நினைவூட்டப்பட்டது. இந்த நாளை என்றும் மறக்க முடியாத நாளாக மாற்றுவதற்கு செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் அனைத்து சிறுவர்களுக்கும் பாடசாலைப் பைகளை வழங்கி வைத்தது.
இந்த நிகழ்வை மறுவாழ்வு மருத்துவமனையைச் சேர்ந்த அர்ப்பணிப்பு மிக்க மருத்துவக் குழுவும் அங்கீகரித்து ஆதரித்தது. இந்தக் குழுவில் வைத்தியர் பிரியங்கா குமாரசிங்க (மருத்துவமனைப் பணிப்பாளர்), வைத்தியர் நிஹால் வீரசூரிய (மாகாணப் பணிப்பாளர், சுகாதார சேவைகள், மத்திய மாகாணம்), வைத்தியர் சுரங்க பெர்னாண்டோ (சமூக வைத்திய நிபுணர்), மற்றும் வைத்தியர் ரந்தினி விஜேவர்தன (குழந்தைநல வைத்திய நிபுணர்) ஆகியோர் அடங்குவர்.
இந்தக் கொண்டாட்ட நிகழ்வு செரெண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் மீது கொண்டிருக்கும் உறுதிப்பாட்டுக்குச் சான்றாக அமைவதுடன், வணிக செயற்பாடுகளுக்கு இலங்கையின் சிறுவர்களின் வாழ்க்கையைத் தொட்டு, சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்க இந்நிறுவனம் உதவுகிறது.
