Header Logo
Mogo Academy

வணிகம்
2025ஆம் ஆண்டின் ஒன்பது மாதத்தில் வலுவான செயலாற்றுகையை வெளிப்படுத்திய ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் ஜெனரல் நிறுவனம்

Oct 29, 2025 - 08:29 AM -

0

2025ஆம் ஆண்டின் ஒன்பது மாதத்தில் வலுவான செயலாற்றுகையை வெளிப்படுத்திய ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் ஜெனரல் நிறுவனம்
Mobitel inner

இலங்கையின் முன்னணி அரசசார்பு நிறுவனம் என்ற ரீதியில் SLICGL நிறுவனத்தின் தலைமைத்துவம் நிலையான வளர்ச்சி மற்றும் நிலைப்புத் தன்மையை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது. 

தேசத்தின் முன்னணியான அரசுசார் ஜெனரல் இன்ஷுரன்ஸ் நிறுவனமான ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் ஜெனரல் லிமிடட் (SLICGL) நிறுவனம் 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒன்பது மாதத்திற்கான தனது நிதி நிலவரத்தை அறிவித்துள்ளது. மேம்பட்ட சந்தை நிலவரம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நுகர்வோர் நம்பிக்கை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் வலுவான வளர்ச்சியும் நிலைத்த லாபத்தன்மையும் பிரதிபலிக்கும் வகையில் அதன் நிதி நிலவர அறிக்கை அமைந்துள்ளது. 

2025 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் SLICGL நிறுவனம் 18% வருடாந்த வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட மொத்த பிரீமியமாக ரூ. 21,853 மில்லியனை பதிவுசெய்துள்ளது. இந்நிறுவனம் செயற்பாட்டு இலாபமாக ரூ.257 மில்லியனையும், வரிக்குப் பின்னரான இலாபமாக ரூ.2,614 மில்லியன் ரூபாவையும் அதாவது 17% வருடாந்த வளர்ச்சியையும் பெற்றுள்ளது. மேம்படுத்தப்பட்ட நுகர்வோர் நம்பிக்கை, அதிகரிக்கப்பட்ட வாகன இறக்குமதி மற்றும் சந்தையில் பெற்றுள்ள இடம் போன்றவற்றின் ஒத்துழைப்புடன் இதனை அடையமுடிந்துள்ளது. 

அரசுக்குச் சொந்தமான காப்புறுதிதாரர் என்ற ரீதியில் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் ஜெனரல் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகின்றது. குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்நிறுவனம் ரூ. 0.7 பில்லியனை வரியாகச் செலுத்தியிருப்பதுடன், அரசாங்க பங்குகளில் ரூ.11.5 பில்லியனை முதலீடு செய்திருப்பதன் ஊடாக நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் வழங்கியுள்ள கணிசமான பங்களிப்பு புலப்படுகிறது. ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் ஜெனரல் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் ரூ.1.5 பில்லியன் மதிப்பிலான இலாபப் பங்குத் தொகையைத் திறைசேரிக்கு வழங்கி அதனை வலுப்படுத்தியிருப்பதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17% அதிகரிப்பாகும். இதன் மூலம், தேசிய வருமான அதிகரிப்பு மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் பங்களிப்பது என்ற தனது வகிபாகத்தை இந்நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

“2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதத்தில் எமது இந்த அடைவானது ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் ஜெனரல் நிறுவனம் பலம், நிலைப்புத் தன்மை மற்றும் வியூகம் போன்றவற்றில் கவனம் செலுத்தியிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது” என ஸ்ரீலங்கா இன்ஷ{ரன்ஸ் ஜெனரல் லிமிடட் நிறுவனத்தின் தலைவர் திரு.நுஸித் குமாரதுங்க தெரிவித்தார். “அரசுக்குச் சொந்தமான நிறுவனம் என்ற ரீதியில் பொருளாதாரத்திற்குத் தொடர்ச்சியான பெறுமதியை வழங்கும் அதேநேரம், தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதில் எமது பொறுப்பைத் தொடர்ந்தும் நிறைவேற்றி வருகிறது.” என்றார். 

நாடு முழுவதும் உள்ள 143 கிளைகள், அர்ப்பணிப்புடன் செயல்படும் விற்பனை பிரதிநிதிகள் மற்றும் ஆலோசகர்கள் குழுவின் மூலம் வலுவான புதிய வணிக வளர்ச்சி பதிவாகி SLICGL நிறுவனத்தின் செயல்திறன், சமநிலை மற்றும் உறுதியான காப்புறுதிச் செயற்பாடு பிரதிபலிக்கப்படுகிறது. இந்த விரிவான விநியோக வலையமைப்பு, நிறுவனத்தின் சந்தை நிலைப்பாட்டையும் நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கான அணுகு முறையையும் மேலும் வலுப்படுத்துகிறது. 

தேசிய பொறுப்புடன் செயற்படும் அரசுக்குச் சொந்தமான நிறுவனம் என்ற ரீதியில் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையுடன் மக்களைப் பாதுகாப்பது, சொத்துக்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை SLICGL நிறுவனம் பாதுகாத்து வருகிறது. 

SLICGL நிறுவனத்தின் உறுதியான அடிப்படைகள் மற்றும் நற்பெயர் என்பன சுயாதீனமான அங்கீகாரங்களினால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன: 

தேசிய காப்புறுதியாளர் நிதி உறுதி தரப்படுத்தலில் SLICGL நிறுவனம் Fitch Ratings இனால் A+ (lka) ஆக தரப்படுத்தப்பட்டுள்ளது - இலங்கையில் எந்த காப்புறுதி நிறுவனத்திற்கும் வழங்கப்பட்ட அதிகபட்ச மதிப்பீடாக இது விளங்குகிறது இது மிகச் சிறந்த நிதி நிலைத்தன்மையையும், இறைமைக்கான ஆதரவையும் பிரதிபலிக்கிறது. 

ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் ஜெனரல் லிமிடட் (SLICGL) நிறுவனம் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க ஜெனரல் இன்ஷுரன்ஸ் வர்த்தக நாமமாக Brand Finance 2025 இனால் பெயரிடப்பட்டதன் மூலம், தேசத்தின் முன்னணியாளர் மற்றும் வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனம் என்பது மீளுறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அரசின் உரிமையையும், இலட்சக்கணக்கான காப்புறுதிதாரர்களின் நம்பிக்கையையும் தளமாகக் கொண்டு, ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் ஜெனரல் நிறுவனம் இலட்சியத்துடன் முன்னேறி வருகிறது. நிதி சிறப்பையும், தேசிய சேவையையும், ஒவ்வொரு இலங்கைக் குடும்பம் மற்றும் நிறுவனத்தையும் பாதுகாக்கும் உறுதியான அர்ப்பணிப்பையும் ஒருங்கிணைத்து இது வழிநடத்தி வருகிறது. 

ஸ்ரீலங்கா இன் ஷுரன்ஸ் ஜெனரல் பற்றி 

ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் ஜெனரல் லிமிடட் நிறுவனம் தேசத்தின் முன்னணியான அரசுக்குச் சொந்தமான பொதுக் காப்புறுதிதாரர் என்ற வகையில், வாகனம், தீ, கடல், பொறியியல், சுகாதாரம் மற்றும் ஏனைய விசேட துறைகளுக்கு விரிவான பாதுகாப்பை வழங்கி வருகிறது. பெருமைக்குரிய பாரம்பரியம், வலுவான அரசின் ஒத்துழைப்பு மற்றும் நாடு முழுவதிலுமுள்ள விரிவான கிளை வலையமைப்புடன் SLICGL நிறுவனம் இலங்கையின் நம்பகமான பாதுகாப்பு தூணாக திகழ்கிறது — மக்களின் உயிர்களையும், சொத்துகளையும், மற்றும் நாட்டின் முன்னேற்றத்தையும் பாதுகாத்து வருகின்றது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara