Header Logo
Mogo Academy

வணிகம்
வீட்டு வசதிகளுக்கு முழுமையான நிதியுதவியை வழங்கும் திட்டத்தில் கொமர்ஷல் வங்கியும் பிரைம் லேண்ட்ஸும் இணைகின்றன

Oct 29, 2025 - 08:32 AM -

0

வீட்டு வசதிகளுக்கு முழுமையான நிதியுதவியை வழங்கும் திட்டத்தில் கொமர்ஷல் வங்கியும் பிரைம் லேண்ட்ஸும் இணைகின்றன
Mobitel inner

கொமர்ஷல் வங்கியானது பிரைம் குழுமத்தால் உருவாக்கப்பட்ட தொடர்மாடிக்குடியிருப்புகள் அல்லது பாதுகாக்கப்பட்ட குடியிருப்புகளினை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களின் கனவை நனவாக்குவதில் தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை நிரூபிக்கும் வகையில், பிரைம் லேண்ட்ஸ் (Prime Lands) மற்றும் பிரைம் லேண்ட் ரெசிடென்சிஸ் (Prime Land Residencies) நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தமானது, வீட்டு உரிமையாளர்கள், கொள்வனவாளர்கள் மற்றும் வங்கியை உள்ளடக்கிய முத்தரப்பு ஒப்பந்தம் மூலம் கொமர்ஷல் வங்கியின் வீட்டுக் கடன் வசதிகளை வாடிக்கையாளர்கள் தடையின்றி அணுக உதவுகிறது. வீட்டுக் கடன் துறையில் சந்தை முன்னோடியாகத் திகழும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் நில ஆதனத்துறையில் மிகவும் நம்பகமான நிறுவனத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்ட சொத்துக்களில் முதலீடு செய்ய விரும்பும் கடன்பெறுநர்களுக்கு ஒப்பிடமுடியாத நிபுணத்துவத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது. 

இந்த ஒப்பந்தம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் தனிநபர் வங்கிப்பிரிவு பிரதிப் பொது முகாமையாளர் திரு. எஸ். கணேசன், பிரைம் லேண்ட்ஸ் மற்றும் பிரைம் லேண்ட் ரெசிடென்சிஸ் உடனான இந்த ஒப்பந்தமானது, எமது வீட்டுக் கடன்பிரிவை விரிவுபடுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பை உருவாக்குகிறது, அதே நேரத்தில் அதிகமான இலங்கையர்கள் தமது வாழ்க்கை இலக்குகளில் ஒன்றை அடைய உதவுகிறது. கொமர்ஷல் வங்கியின் வலுவான வீட்டுக் கடன் வழங்கல், முன்னணி அபிவிருத்தியாளர் என்ற பிரைம் குழுமத்தின் நற்பெயருடன் இணைந்து, வாடிக்கையாளர்கள் நிதி உறுதித்தன்மை மற்றும் கட்டுமானத்தின் தரம் ஆகிய இரண்டின் மூலமும் பயனடைவதை உறுதி செய்கிறது என்று கூறினார். 

இலங்கையில் நில ஆதனத்துறையில் துறையில் முன்னணியில் திகழும் பிரைம் குழுமமானது, நிலங்கள், வீடுகள், நிதி மற்றும் தொடர்மாடிக்குடியிருப்புகளுடன் தொடர்புடைய துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலான நம்பகத்தன்மையுடன் 300,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட இக்குழுமமானது, அதன் பசுமையான தொலைநோக்குப் பார்வையால் இயக்கப்படுவதாக பறைசாற்றும் நிலையில் பூமியில் ஒரு சிறந்த இடத்தை உருவாக்குவதற்கு உறுதிபூண்டுள்ளது, இது வாடிக்கையாளர்களின் கனவுகளை உயிர்ப்பிக்கும் குடியிருப்புகளை வழங்குவதற்கான அதன் ஆர்வத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது. 

இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. 

மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara