Oct 30, 2025 - 02:14 PM -
0
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் செம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இது உலகின் நான்கு சிறந்த வீரர்கள் பங்கேற்கும் ஒரு குறுகிய விரைவு சதுரங்கப் போட்டியாகும்.
இதில் இந்தியாவை சேர்ந்த குகேஷ், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், ஹிகாரு நகமுரா மற்றும் ஃபேபியானோ கருவானா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிளட்ச் செஸ் செம்பியன்ஸ் போட்டியில் சிறப்பாக விளையாடிய உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் 25.5 புள்ளிகள் பெற்று செம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
அதே சமயம் உலக செஸ் சாம்பியனான குகேஷ் இந்த செஸ் தொடரில் கடைசி இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

