Oct 31, 2025 - 12:04 PM -
0
உலக உணவு தினத்தை முன்னிட்டு இரசாயனப் பாவனையற்ற வீட்டுத்தோட்ட உற்பத்திகளின் கண்காட்சியும், விற்பனையும் நிகழ்வு நேற்று (30) யாழ்ப்பானத்தில் நடைபெற்றது.
பிரதான வீதி புனித மாட்டீனார் குருமட முன்பாக நேற்று காலை 09.30 க்கு ஆரம்பமான இந்நிகழ்வு பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற்றது.
கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்ப இந்நிகழ்வில் இரசாயனப்பாவனையற்ற வீட்டுத்தோட்ட உற்பத்தி பொருட்களை விற்பனைக் கண்காட்சியில் வீட்டுத்தோட்ட முயற்சியாளர்கள் பலர் தமது உற்பத்திகளை பார்வைக்கு வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
--

