வடக்கு
யாழ். மாநகர சபை உறுப்பினர் ஒருவரது முன்மாதிரியான செயல்!

Nov 3, 2025 - 12:40 PM -

0

யாழ். மாநகர சபை உறுப்பினர் ஒருவரது முன்மாதிரியான செயல்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின், யாழ். மாநகர சபை உறுப்பினராகிய ரத்னம் சதீஸ், மாநகர சபையினால் நான்கு வருடங்களுக்கும் வழங்கப்படும் அவருக்கான சம்பள கொடுப்பவை சமூக சேவைக்காக பயன்படுத்துவதற்காக முன்வந்துள்ளார். 

அந்தவகையில், ஒவ்வெரு மாதமும், 24 வட்டாரங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் இந்த கொடுப்பவை பகிர்ந்தளிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். 

அதனடிப்படையில் மாநகர சபையால் வழங்கப்பட்ட கொடுப்பனவுடன் தனது சொந்தப் பணம் இருபதாயிரம் ரூபாவையும் சேர்த்து, கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 100 மாணவர்களுக்கு வவுச்சர்கள் வழங்கியுள்ளார். இந்த வவுச்சர்கள் நேற்று (02) வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள் s.ஜாமினி, s.மதுசிகான், கட்சி உறுப்பினர்களான நிக்கோலா, சுதர்மன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வவுச்சர்களை வழங்கியுள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05