Nov 3, 2025 - 04:36 PM -
0
Bureau Veritas இன் அங்கமான Bureau Veritas Consumer Products Services Lanka (Pvt.) Ltd, அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி சூழல்சார் விருதுகள் 2025 இல், “சூழலுக்கு நட்பான தனியார் நிறுவனங்கள்” பிரிவில் பெருமைக்குரிய தங்க விருதை சுவீகரித்திருந்தது. கடந்த ஆண்டில் பெற்றுக் கொண்ட வெள்ளி விருதிலிருந்து, தங்க விருதுக்கு முன்னேறியிருந்தமை விசேடமாக குறிப்பிட வேண்டிய விடயமாக அமைந்துள்ளது.
சூழல்சார் சிறப்பு மற்றும் நிலைபேறான வியாபார செயன்முறைகள் ஆகியவற்றில் நிறுவனம் தொடர்ச்சியாக காண்பிக்கும் அர்ப்பணிப்பில் மிகவும் முக்கியத்துவத்தை இது பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. ஆய்வுகூட பரிசோதனைகள், மதிப்பாய்வு மற்றும் சான்றளிப்பு சேவைகளை வழங்குவதில் உலகளாவிய ரீதியில் முன்னோடியாக Bureau Veritas திகழ்கிறது. உலகின் பல்வேறு பாகங்களில் 1600க்கும் அதிகமான அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் பங்கேற்புடன் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றதுடன், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2025 ஒக்டோபர் 23 ஆம் திகதி நடைபெற்றது. தேசத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சூழல்சார் சம்பியன்களை ஒன்றிணைத்து, சூழல் பாதுகாப்பு, நிலைபேறாண்மை மற்றும் சூழலுக்கு நட்பான புத்தாக்கங்கள் போன்றவற்றை கௌரவித்திருந்தது. இந்நிகழ்வில் விருதுகளைப் பெற்றுக் கொண்டவர்களும், பல்வேறு விசேட அதிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் கே.ஆர்.உடுவாவல, சுற்றுச் சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி ஆகியோருடன், மத்திய சூழல் அதிகார சபை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Bureau Veritas Consumer Products Services Lanka (Pvt.) Ltd இன் பொது முகாமையாளர் சொனாலி நாகந்தல கருத்துத் தெரிவிக்கையில், “தங்க விருதை பெற்றுக் கொண்டமை என்பது Bureau Veritas Lankaக்கு கிடைத்த மாபெரும் கௌரவிப்பாக அமைந்துள்ளது. சூழல்சார் செயற்பாடுகளுக்கான வழிகாட்டலில் எமது அணியினரின் ஒப்பற்ற அர்ப்பணிப்பிற்கான கௌரவிப்பாகவும் அமைந்துள்ளது. இலங்கையில் நிலைபேறான வியாபார செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எம்மை தொடர்ந்தும் ஊக்குவிக்கும் வகையில் இந்த சாதனை அமைந்துள்ளது. தனியார் துறையைச் சேர்ந்த ஏனையவர்களையும் சூழல்சார் பொறுப்புச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தூண்டுவதாகவும் அமைந்துள்ளது.” என்றார்.
Bureau Veritas Lanka பெற்ற இந்தத் தங்க விருதானது, தனியார் துறையில் நிலையான சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை அமுல்படுத்துவதில் அதன் தலைமைத்துவத்தை விசேடமாக வெளிப்படுத்துகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வில், நாடு முழுவதிலுமிருந்து தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு மொத்தமாக 132 விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. இது, இந்த அங்கீகாரத்தின் போட்டித் தன்மையையும், தங்க விருதை அடைவதற்குத் தேவைப்படும் உயர் தரங்களையும் எடுத்துக்காட்டுகிறது.
பரிசோதனைகள், மதிப்பாய்வுகள் மற்றும் சான்றளிப்பு சேவைகளை இலங்கையில் வழங்குவதில் முன்னோடியாகத் திகழும் Bureau Veritas லங்கா, சூழல்சார் பொறுப்புத் தன்மையையும், வியாபாரச் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது. வெள்ளி என்பதிலிருந்து தங்கத்திற்கு நிறுவனத்தின் முன்னேற்றத்தினூடாக, சூழல் மேம்பாட்டுக்கான நிலையான அர்ப்பணிப்பு என்பதனூடாக எவ்வாறு அளவிடக்கூடிய பெறுபேறுகளை எய்த முடியும் என்பதையும், கூட்டாண்மை சூழல் வழிமுறைச் செயற்பாடுகளில் புதிய நியமங்களை எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்பதையும் வெளிக்காட்டுகிறது.
Bureau Veritas ஸ்ரீ லங்காவில் 275 க்கும் அதிகமான திறன் படைத்த மற்றும் அர்ப்பணிப்பான ஊழியர்கள் பணியாற்றுவதுடன், இலங்கை தொடர்பான பரந்த அறிவுடன், வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்த்து வருகின்றனர். ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளுக்குப் பொருந்தக்கூடிய தரநிலைகள் பற்றிய ஆழமான அறிவை வழங்குவதுடன், இணக்கத்திற்கான சுயாதீனமான மூன்றாம் தரப்புச் சரிபார்த்தல், வடிவமைப்பு நிலை முதல் திட்டம் நிறைவடையும் வரை அபாயங்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்துதல், விநியோகச் சங்கிலி செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கான அணுகலை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் மதிப்பைச் சேர்க்கிறது. இதன் சேவைப் பிரிவில் ஆடைப் பரிசோதனைகள், ஆய்வு மற்றும் சமூக இணக்கத் மீளாய்வுச் சேவைகள், உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் பரிசோதனை, சுற்றுச்சூழல் பரிசோதனை, விளையாட்டு சாதனங்கள் மற்றும் கடினப் பொருட்களின் சோதனை, அளவுத்திருத்தச் சேவைகள், உயிரியல் சிதைவுத்தன்மை (biodegradability) மற்றும் asbestos மதிப்பீடுகள் ஆகியவை அடங்கியுள்ளன.

