Nov 3, 2025 - 04:40 PM -
0
இலங்கையில் சமூகங்களுக்கிடையே காணப்படும் பாரிய சவால்களில் ஒன்றாக சிறுவர்கள் மத்தியிலான ஊட்டச்சத்து குறைபாடு திகழ்கிறது. இது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது அவர்களின் கற்றல், வளர்ச்சி மற்றும் எதிர்கால கனவுகளையும் பாதிக்கிறது. இந்நிலையில் சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாட்டினை ஒழித்து அவர்களுக்கு போஷாக்குணவினை வழங்கும் சமூக நோக்குடன் , அபெர்டீன் ஹோல்டிங்ஸின்[Aberdeen Holdings]’ Snehadhana அறக்கட்டளையானது , அதன் குழும அங்கத்துவ நிறுவனமான டிரொபிகல் லைஃப் இன்டர்நெஷனலுடன் [Tropikal Life International] இணைந்து, பாடசாலை மாணவர்களுக்கான உணவு உதவித் திட்டத்தின் மூலம் இந்த சமூகப்பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, இதன் சமீபத்திய திட்டமானது நீர்கொழும்பு /பண்டாரநாயக்க வித்யாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சர்வதேச சிறுவர் தினத்தினைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 1, 2025 அன்று தொடங்கப்பட்ட இந்த முயற்சியானது , 100க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அன்றாடம் உணவை வழங்குவதற்கப்பால் ஒரு கட்டமைக்கப்பட்ட முறைமையை ஒன்றிணைக்கிறது, அங்கு Snehadhana அறக்கட்டளை மற்றும் டிரொபிகல் லைஃப், என்பன ஒன்றிணைந்து வாராந்த மளிகைப் பொருட்கள் மற்றும் சமையலறைப் பொருட்களை கொள்வனவு செய்தல் முதல் பாதுகாப்பான களஞ்சியப்படுத்தல் , சுகாதாரம் மற்றும் சீரான உணவு தயாரிப்பை உறுதி செய்வது வரை ஒவ்வொரு அம்சத்திற்கும் நிதியளிப்பதுடன் ஒருங்கிணைத்து மற்றும் கண்காணிப்பையும் மேற்கொள்கிறது.இந்த திட்டம் பெற்றோரை தன்னார்வலர்களாக ஈடுபடுத்துவதன் மூலம் பாடசாலை சமூகத்தை மேம்படுத்துகிறது, இந்த விழாவில், பண்டாரநாயக்க வித்யாலயத்தின் அதிபர் திருமதி. எச்.டி.ஐ.எம். பீரிஸ் உரையாற்றுகையில் , ஒழுங்கான முறையில் போஷாக்கு நிறைந்த உணவினை உட்கொள்ளாமல் பாடசாலைக்கு சமுகமளிக்கும் பல குழந்தைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பாக எடுத்துரைத்தார்.ஊட்டச்சத்து என்பது ஒரு சலுகை அல்ல, எனவும் ஒரு குழந்தையின் கற்றல் மற்றும் முன்னேற்றத்தினை வடிவமைப்பதற்கு இன்றியமையாதது என்றும் விவரித்தார்.
ஹெய்யன்துடுவ மஹிந்த வித்யாலயத்தில் ஜனவரி 2023 இல்ஆரம்பிக்கப்பட்ட இம்முயற்சியில் முதற் கட்டத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை உணவு உதவித் திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளதுடன் இது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாடசாலை வாரத்திலும், சராசரியாக 400 உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன, இது Snehadhana அறக்கட்டளை, டிரொபிகல் லைஃப், பாடசாலை ஊழியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையிலான அசைக்க முடியாத ஒத்துழைப்பின் மூலம் சாத்தியமாகியுள்ளதுடன் திட்டத்தின் முக்கியத்துவமானது ஆழமாக உணரப்பட்டுள்ளது, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு சீரான உணவு மற்றும் மாணவர்களின் வருகை மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வில் நேர்மறையான மாற்றத்திற்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
பல ஆண்டுகளாக, Snehadhana அறக்கட்டளையானது , Snehadhana சமூக சமையலறை போன்ற முயற்சிகள் முதல் நிலையான உணவு உதவித் திட்டங்கள் வரை, சமூகங்கள் முழுவதும் ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வை நிவர்த்தி செய்வதில் ஒரு முன்னோடியான பங்கினை வகித்து வருகிறது. சிறுவர்களுக்கு ஊட்டச்சத்துமிகு உணவினை வழங்கி வலிமையான, ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்குவதன் மூலம், கருணையை நிலைத்தன்மையாக மாற்றும் , நோக்கம் கொண்ட செயல்களின் மூலம் அபெர்டீன் ஹோல்டிங்ஸின் இலக்கினை இவ்வமைப்புகள் பிரதிபலிக்கின்றன.

