Nov 3, 2025 - 04:46 PM -
0
இலங்கையின் முன்னணி நிலைபேறான கோழி இறைச்சி உற்பத்தியாளரான New Anthoney’s Group, தனது Anthoney’s Meatlery வர்த்தக நாமத்திலமைந்த புதிய விற்பனை நிலையத்தை தெல்கந்த பகுதியில் திறந்துள்ளதாக அறிவித்துள்ளது. உயர் தரம் வாய்ந்த, பொறுப்பு வாய்ந்த இறைச்சியை நுகர்வோருக்கு இலகுவாக அணுகச் செய்யும் செயற்பாட்டின் மற்றுமொரு முக்கிய அங்கமாக இந்த விரிவாக்க நடவடிக்கை அமைந்துள்ளது. துறையில் ஒட்டுமொத்த கொள்வனவு அனுபவத்தை மேம்படுத்தும் வகையிலும் இந்த செயற்பாடு அமைந்துள்ளது.
தனது அன்ரிபயோட்டிக் பாவனையற்ற ஹரிதஹரி கோழி இறைச்சி தெரிவின் காரணமாக, பெருமளவானோரின் வரவேற்பைப் பெற்ற கோழி இறைச்சி நாமமாக Anthoneys தொடர்ந்தும் திகழ்கிறது. 100 சதவீதம் கொம்போஸ்ட் பொதியினூடாக உணவு பாதுகாப்பு மற்றும் ஹலால் சான்றிதழை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Anthoney’s Meatlery முதன் முதலில் பத்தரமுல்ல பகுதியில் நவீன வசதிகள் படைத்த விற்பனை நிலையமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இங்கு உயர் தரமான, புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சித் தெரிவுகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. தெல்கந்தயில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய விற்பனை நிலையம் இந்த வசதியை மேலும் பல நுகர்வோருக்கு ஏற்படுத்தியுள்ளதுடன், அன்ரிபயோட்டிக் இல்லாத கோழி, பன்றி, மாடு, ஆடு இறைச்சி வகைகள், சொசேஜஸ், முட்டை மற்றும் உடனடியாக தயாரிக்கக்கூடிய உணவு வகைகளையும் கொண்டுள்ளது.
இந்த விற்பனை நிலையத்தின் திறப்பு தொடர்பில் New Anthoney’s Group பணிப்பாளர் எரங்க குருகுலாரச்சி கருத்துத் தெரிவிக்கையில், “தெல்கந்த பகுதியில் எமது விற்பனை நிலையத்தை திறந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எமது Anthoney’s Meatlery ஐ பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கமடையச் செய்துள்ளோம். இந்த விற்பனை நிலையம் பல விசேட உள்ளம்சங்களைக் கொண்டுள்ளது. இலங்கையருக்கு பசுமையான, ஒழுக்கமான முறையில் தயாரிக்கப்பட்ட இறைச்சி வகைகளை அணுகச் செய்வதற்கான எமது உறுதி மொழியின் தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் தரம் ஆகியவற்றை நாடுவதுடன், Anthoney’s Meatlery உடன், அதை நாம் நிறைவேற்றுகிறோம்.” என்றார்.
தெல்கந்த Anthoney’s Meatlery இன் திறப்புடன், சௌகரியம், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை போன்றவற்றுக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மீள உறுதி செய்யப்பட்டுள்ளது. வருடத்தின் முற்பகுதியில், PickMe உடன் இணைந்து, தமது தயாரிப்புகள் வாடிக்கையாளரின் இருப்பிடங்களுக்கே விநியோகிக்கும் சேவையை ஆரம்பித்திருந்தது. மேலும், அண்மையில் MasterChef இன் உத்தியோகபூர்வ பங்காளராகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உணவு தயாரிப்பு போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தனது ஹரிதஹரி கோழி இறைச்சி தெரிவுகளை விநியோகித்திருந்தது.
சர்வதேச உணவு தயாரிப்பு சிறப்புடனான வர்த்தக நாமத்தின் ஒன்றிணைவை இந்த பங்காண்மை வெளிப்படுத்துவதுடன், விருந்தோம்பல் மற்றும் உணவு தொழிற்துறைகளில் அதிகரித்துச் செல்லும் நற்பெயர் மற்றும் தரம் ஆகியவற்றையும் உறுதி செய்துள்ளது. மேலும், e-வணிக கட்டமைப்பான Dorakadapaliya.com, BestWeb.LK Awards 2025 இல் சிறந்த e-வணிக இணையத்தளத்துக்கான தங்க விருதை சுவீகரித்திருந்தது. பாவனையாளர் அனுபவம் மற்றும் ஒன்லைன் விற்பனை ஆகியவற்றில் வர்த்தக நாமத்தின் சிறப்பிற்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

