Nov 3, 2025 - 04:52 PM -
0
CIMA தனியார் வகுப்புக்களை நடாத்தும் இலங்கை முன்னணி நிறுவனமாகவும், நிகழ்வாய்வில் (Case Study) நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாகவும் திகழ்ந்து வருகின்ற Nanaska, இல. 464/1/1, காலி வீதி, கொழும்பு 03 என்ற முகவரியில் ஒக்டோபர் 2 அன்று தனது புதிய மாணவர் உதவி மையத்தைத் திறந்து வைத்து மற்றுமொரு சாதனை இலக்கினை நிலைநாட்டியுள்ளது. Nanaska பழைய மாணவர்கள், சக பணியாளர்கள், CIMA பிரதிநிதிகள், தொழில்துறை கூட்டாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
2009 ல் topcimapass.com என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டு, பின்னர் Nanaska என்ற மறுநாமமிடப்பட்ட இக்கல்வி நிறுவனம், இணைய வழியில் CIMA Case Study தனியார் வகுப்பாக தனது பயணத்தை ஆரம்பித்தது. 2020 ல் அனைத்து மூன்று CIMA Case Study நிலை மட்டங்களுக்கும் விரிவான ஆதரவை வழங்கி, தனித்தியங்கும், பதிவு செய்யப்பட்ட தனியார் வகுப்பு நிறுவனமாக Nanaska பரிணாம மாற்றங்கண்டது. 2021 ல் CIMA ன் அனைத்து பாடநெறிகளுக்கும் தனியார் வகுப்பு கல்வியை வழங்கும் நிறுவனமாக விரிவுபடுத்தப்பட்டதுடன், கொழும்பில் பிரத்தியேக விரிவுரையாளர்கள் குழாம் மற்றும் மாணவர்களை நோக்காகக் கொண்ட உதவி உட்கட்டமைப்பு ஆகியவற்றின் பக்கபலத்துடன் பயணத்தைத் தொடர்ந்தது.
Dankotuwa Porcelain PLC நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், Litro Gas Lanka Limited ன் தலைவரும் கடமையாற்றும் திரு. சண்ண குணவர்த்தன அவர்கள் இக்கல்வி நிறுவனத்தின் ஸ்தாபகராகவும், முன்னணி விரிவுரையாளராகவும் வழிகாட்டி வருவதுடன், இலங்கையில் 4,000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் வெற்றிக்கு Nanaska பங்களித்துள்ளது. நாட்டில் 70% க்கும் மேற்பட்ட CIMA பரிசு வெற்றியாளர்களைத் தோற்றுவித்த பெருமையை இக்கல்வி நிறுவனம் சுமப்பதுடன், உள்நாட்டிலும், சர்வதேசரீதியாகவும் நிதித்துறையில் தொழில் வல்லுனர்களாக மாறவேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்டுள்ளவர்களுக்கு முன்னணி கல்வி வழங்கல் நிறுவனம் என்ற தனது நன்மதிப்பை ஆணித்தரமாக நிலைநாட்டியுள்ளது.
2023 ல் இலங்கையில் CGMA Finance Leadership Program (FLP) எனப்படும் நிதி தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் உத்தியோகபூர்வ கூட்டாளராக மாறியதன் மூலமாக மற்றுமொரு சாதனை இலக்கினை Nanaska நிலைநாட்டியது. பல்வேறுபட்ட தொழில்துறைகளைச் சார்ந்த தொழில் வல்லுனர்கள் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படுகின்ற CIMA தகைமையைப் பெற்றுக்கொள்வதற்கான நேரடி வழிமுறையை இக்கூட்டாண்மை வழங்குவதுடன், அடுத்த தலைமுறை வணிகத் தலைவர்களை வளர்க்க வேண்டும் என்ற Nanaska ன் குறிக்கோளையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சாதனையை பிரதிபலிக்கும் வகையில் கருத்து தெரிவித்த Nanaska ஸ்தாபகரான திரு. சண்ண குணவர்த்தன அவர்கள்: “இப்புதிய மாணவர் உதவி மையம் வெறுமனே ஒரு இட வசதி என்பதற்கும் அப்பாற்பட்டது, உயர்ச்சியை அடையத்துணியும் அனைத்து பயிலுனர்களுக்கும் நாம் வழங்கும் வாக்குறுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றது. வளர்ச்சி வாய்ப்புக்களை தலைமைத்துவமாகவும், அறிவை சர்வதேச வாய்ப்பாகவும் மாற்றுவதில் Nanaska நம்பிக்கை கொண்டுள்ளது. நாம் தொடர்ந்தும் வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுக்கும் சமயத்தில், வழிகாட்டல், வழிப்படுத்தல், மற்றும் மகத்துவத்தை நோக்கிய இடைவிடாத நாட்டம் ஆகியவற்றினூடாக, உலகிற்கு சிறந்த தலைவர்களைக் கட்டியெழுப்பும் எமது நோக்கத்தில் நாம் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளோம்.”
கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய CIMA FLP மையத்துடன், இலங்கையிலுள்ள தொழில் வல்லுனர்கள் சர்வதேசரீதியாக செழித்து வளர்வதற்கு வலுவூட்டி, நிறுவன வெற்றிக்கான சிந்தனையாளர்களை வளர்த்து, உலகிற்கு சிறப்பான தலைவர்களைக் கட்டியெழுப்பும் தனது நோக்கத்தை தொடர்ந்து முன்னெடுப்பதை Nanaska மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

