Header Logo

வடக்கு
புதிதாக திருமணம் செய்த குடும்பங்களுக்கு வீட்டு காணி இல்லை!

Nov 4, 2025 - 09:38 AM -

0

புதிதாக திருமணம் செய்த குடும்பங்களுக்கு வீட்டு காணி இல்லை!

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் பல வருடங்களாக தீர்க்கப்படாமல் உள்ள காணிப் பிரச்சனைக்கு வடக்கு மாகாண ஆளுநர் விரைவாக நடவடிக்கை எடுத்து தீர்வு பெற்றுத் தர வேண்டும் என்று அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மன்னார், நானாட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள நறுவிலிக்குளம் சித்த வைத்தியசாலைக்கு முன் பக்கமாக உள்ள அரச காணியினை நறுவிலிக்குளம் கிராமத்தில் புதிதாக திருமணம் முடித்த குடும்பத்தினர்களுக்கு வழங்குமாறு பல வருடங்களாக வேண்டுகோள் விடுத்தும் எமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அயல் கிராமத்தில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலருக்கு காணி வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

இந்த விடயம் தொடர்பில் நானாட்டான் பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், வடமாகாணம் வரை கடிதம் அனுப்பியும் எமக்கான தீர்வு கிடைக்கவில்லை. 

எனவே வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை நாங்கள் நம்பி உள்ளோம். ஆளுநர் அவர்கள் இந்த காணி விடயம் தொடர்பில் தீர விசாரித்து நறுவிலிக்குளம் கிராமத்தில் புதிதாக திருமணம் முடித்து காணிகள் இல்லாமல் பரிதவிக்கும் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்று எமது கிராமத்து மக்கள் சார்பாக இந்த வேண்டுகோளினை விடுப்பதாக இன்று காணிகள் இல்லாத இளம் குடும்பத்தினர் தெரிவித்தார்கள்.

--

Comments
0

MOST READ

காணொளி
பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

title