Header Logo

வடக்கு
நீதிமன்ற உத்தரவுக்கமைய அழிக்கப்பட்ட கேரள கஞ்சா

Nov 4, 2025 - 04:52 PM -

0

நீதிமன்ற உத்தரவுக்கமைய அழிக்கப்பட்ட கேரள கஞ்சா

யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா இன்று (04) நீதிமன்ற உத்தரவுக்கமைய அழிக்கப்பட்டது. இதன்போது 950 கிலோகிராம் கேரள கஞ்சா அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

யாழ்ப்பாணம், கோம்பயன் மணல் இந்து மயானத்தில் உள்ள மின் தகன மேடையில் போடப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் மற்றும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிவான் உசைன் ஆகியோரின் முன்னிலையில் இன்று மதியம் குறித்த போதைப்பொருள் தொகுதி அழிக்கப்பட்டது. 

கடந்த சில வருடங்களாக நீதிமன்ற சான்றுப் பொருளாக வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாவே இவ்வாறு அழிக்கப்பட்டது. 

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் எடுத்து வரப்பட்ட கேரள கஞ்சா நீதிவான், நீதிமன்ற பதிவாளர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் அழிக்கப்பட்டது.

--

Comments
0

MOST READ

காணொளி
பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

title