Header Logo

வடக்கு
நிதி சேகரிக்க வந்த கும்பல் பொலிஸாரால் விரட்டியடிப்பு!

Nov 7, 2025 - 12:03 PM -

0

நிதி சேகரிக்க வந்த கும்பல் பொலிஸாரால் விரட்டியடிப்பு!

நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் நேற்று (06) விரட்டியடிக்கப்பட்டது. 

இது குறித்து மேலும் தெரியவருகையில், 

குறித்த குழுவில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உடலில் பாதிப்புகள் உள்ளதாகவும், அவற்றுக்கு சிகிச்சை செய்வதற்கு பாரியளவு நிதி தேவை என்றும் பொய்கூறி வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

அந்தவகையில், குறித்த கும்பல் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்தது. இது குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த குழுவில் இருந்த மூவரையும் அழைத்துச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 

அவர்கள் ஒவ்வொருவரும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் இனிமேல் இவ்வாறான சட்டவிரோத நிதி சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்த பின்னர் பொலிஸார் அவர்களை விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

--

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title