Nov 7, 2025 - 06:52 PM -
0
இலங்கை, இந்திய மீனவப் பிரச்சினையில் நிரந்தர தீர்வுகாண வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டித்தும் தமிழக வெற்றிக் கழகம் நாகையில் இன்று (7) உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தது
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர்.
கைது செய்யப்படும் மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவதுடன், மீனவர்களின் படகுகள், வலைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் தவெக துணைப்பொதுச்செயலாளர் ராஜ்மோகன், நாகை தவெக மாவட்டச் செயலாளர் சுகுமாரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
உண்ணாவிரதத்தின்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டிருந்தது.

