உலகம்
10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த ஆண் செவிலியர்!

Nov 8, 2025 - 09:19 AM -

0

10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த ஆண் செவிலியர்!

இரவுப்பணியில் அழுத்தத்தை குறைக்க தனது பராமரிப்பில் இருந்த 10 நோயாளிகளை கொன்ற ஆண் செவிலியருக்கு ஜெர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது. 

ஜெர்மனியின் வூர்ஸ்பர்க் நகரில் உள்ள வைத்தியசாலையில் கடந்த 2020 இல் செவிலியராக பணியில் சேர்ந்த அவர் தனது பராமரிப்பில் இருந்த நோயாளிகளுக்கு தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி செவிலியர் கொன்றுள்ளார். 

இவ்வாறு அவர் 10 நோயாளிகளை கொலை செய்துள்ளார். மேலும் 27 நோயாளிகளை அதே முறையில் கொல்ல முயன்றுள்ளார் என்றும் தெரியவந்தது. 

டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை இந்த இறப்புகள் பதிவாகி உள்ளன. இரவுப் பணியின் போது ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவே அவர் இந்தச் செயலைச் செய்ததாகத் கூறப்படுகிறது. 

குற்றம் சாட்டப்பட்ட செவிலியரின் பெயர் வெளியிடப்படவில்லை. வயதான மற்றும் தீவிர நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பராமரித்து வந்த செவிலியர், அவர்களது வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் தானே எஜமானி போல செயல்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் வாதிட்டார். 

இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் நீதிமன்றம், செவிலியருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இருப்பினும் அவர் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

வடக்கு ஜெர்மனியில் 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நீல்ஸ் ஹோஜெல் என்ற ஆண் நர்ஸ் ஒருவர் 2 வைத்தியசாலைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளை கொலை செய்தார். 

2019இல் ஆண்டில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. ஜெர்மனியின் நவீன வரலாற்றில் கொடூர கொலைக்காரர் இவர் என்று கருதப்படும் நிலையில் தற்போது அதே பாணியில் மற்றொரு செவிலியரின் கொடூர கொலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05