Nov 9, 2025 - 11:27 AM -
0
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு, ஹட்டன் நகர மக்கள் பட்டாசு வெடித்து தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம், பெருந்தோட்டத் துறையின் குறைந்தபட்ச ஊதியத்தை 1,550 ரூபாவாக உயர்த்தவும், அத்துடன் கூடுதலாக 200 ரூபா ஊக்கத்தொகை கொடுப்பனவை வழங்கவும் ஜனாதிபதி எடுத்த முடிவுக்கு ஹட்டன் நகர மக்கள் தமது பெரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஹட்டன் நகரத்தில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு அவசர தீர்வுகளை வழங்குவதற்காக இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யும் திட்டமும் குடியிருப்பாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக, ஹட்டன் நகர மக்கள் நகர மையத்தில் பட்டாசுகளை கொளுத்தி, தமது பாராட்டுகளையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
--

