மலையகம்
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து தொழிலாளர்கள் கொண்டாட்டம்

Nov 9, 2025 - 11:58 AM -

0

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து தொழிலாளர்கள் கொண்டாட்டம்

அக்கரைப்பத்தனை நியுபிரஸ்டன் தோட்டத் தொழிலாளர்கள் 2026 வரவு செலவுத் திட்டம் இன் மூலம் தங்களுக்கு 1,750 ரூபா சம்பள அதிகரிப்பை அறிவித்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து இன்று (09) விசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தனர். 

பல ஆண்டுகளாக சம்பள உயர்வுக்காகப் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தியும், அது பயனளிக்காத நிலையில், ஜனாதிபதி அவர்கள் வரவு செலவுத் திட்டத்தில் 200 ரூபா சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவித்ததோடு, இறுதியாக ரூ. 1,750 அடிப்படைச் சம்பளம் வழங்கப்படுமென அறிவித்தமை தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் தோட்டத்தில் உள்ள கொழுந்து நிறுவை செய்யும் இடத்தில் ஒன்றுகூடி அங்கு அவர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏந்தி, பால் சோறு விநியோகித்துத் தங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05