விளையாட்டு
11 பந்தில் அரை சதம்! முதல்தர கிரிக்கெட்டில் சாதனை படைத்த வீரர்!

Nov 10, 2025 - 09:16 AM -

0

11 பந்தில் அரை சதம்! முதல்தர கிரிக்கெட்டில் சாதனை படைத்த வீரர்!

இந்தியாவின் குஜராத்தின் சூரத் நகரில் ரஞ்சி கிண்ண கிரிக்கெட் 'பிளேட் குரூப்' போட்டி நடந்து வருகிறது. 

இதில் மேகாலயா, அருணாச்சல பிரதேசம் அணிகள் மோதுகின்றன. முதல் நாள் முடிவில் மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 386/2 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 

இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேகாலயா அணிக்கு அர்பித் படேவாரா (207), தலைவர் கிஷான் லின்தோ (119), ராகுல் தலால் (144) கைகொடுத்தனர். 

அடுத்து இறங்கிய ஆகாஷ் குமார் சவுத்ரி முதல் 3 பந்தில் 2 ஓட்டங்கள் (0, 1, 1) மட்டுமே எடுத்தார். அதன்பின், அடுத்த 8 பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டார். 

வரிசையாக 8 சிக்சர்களை விளாசிய இவர் 11 பந்தில் அரைசதம் எட்டினார். முதல்தர போட்டியில் தொடர்ச்சியாக 8 சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். 

மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 628/6 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. ஆகாஷ் 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்நிலையில், முதல்தர போட்டியில் அதிவேகமாக (11 பந்து) அரைசதம் விளாசிய வீரரானார் ஆகாஷ் குமார் சவுத்ரி. முன்னதாக, லீசெஸ்டர்ஷையர் அணியின் வெய்ன் ஒயிட் 12 பந்தில் (2012) இச்சாதனை படைத்திருந்தார். 

முதல் தர போட்டியில் வரிசையாக 6 சிக்சர் பறக்கவிட்ட 3வது வீரரானார் ஆகாஷ் குமார். மேற்கிந்திய தீவுகளின் சோபர்ஸ், இந்தியாவின் ரவி சாஸ்திரி ஆகியோர் இப்படி சாதித்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05