Nov 10, 2025 - 04:49 PM -
0
எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு தயாராகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்க கோரியும், பாடசாலை நேரத்தை அதிகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்று (10) யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
--

