வடக்கு
சுண்ணாம்பினால் பார்வையிழந்த 4 சிறுவர்கள்

Nov 10, 2025 - 05:30 PM -

0

சுண்ணாம்பினால் பார்வையிழந்த 4 சிறுவர்கள்

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால் அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பு சிறுவர்களின் கண்களை பாதித்துள்ளமையால் 6 சிறுவர்களின் கண்கள் பாதிப்பு அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் எம்.மலரவன் தெரிவித்துள்ளார். 

இன்று (10) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஊடகசந்திப்பினை நடாத்தினார். இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கண்களில் கல் போன்ற பிறபொருட்கள் உட்புகும்போது அதற்கு முலைப்பாலையோ, சேவலின் குருதியையோ கண்களில் விடவேண்டாம் கிருமித் தொற்று காரணமாக நிரந்தரமாக பார்வை இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05