வடக்கு
யாழில் வர்த்தகர் ஒருவரின் வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார்

Nov 10, 2025 - 09:09 PM -

0

 யாழில் வர்த்தகர் ஒருவரின் வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் இன்று (10) சோதனை நடத்தப்பட்டது. 

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலையமொன்றிலேயே பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர். 

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொண்ட அனுமதிக்கமைய குறித்த சோதனை நடத்தப்பட்டது. 

சட்டவிரோத சொத்துச் சேர்த்த சிலருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு இன்னொருவரிடம் இருந்து கைத்துப்பாக்கியின் புகைப்படம் அனுப்பபட்டிருந்தமை பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனொரு கட்டமாக குறித்த நபரின் விற்பனை நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05