செய்திகள்
இலங்கையில் மீண்டும் உயரும் தங்கம் விலை

Nov 11, 2025 - 11:40 AM -

0

இலங்கையில் மீண்டும் உயரும் தங்கம் விலை

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. 

இதன்படி கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் 9 ஆயிரம் ரூபாயினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரப்படி, 

24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 325,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 300,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05