Nov 11, 2025 - 12:23 PM -
0
NDB வங்கியானது உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் ஐக்கிய இராச்சியம்[UK] சார்ந்த கல்வி ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றான AHZ எடுயூகேஷன் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்துடன் [AHZ Education Consultants,] பங்குடைமையில் இணைந்துள்ளது. 2025 செப்டம்பர் 18 அன்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மூலம் இந்த ஒத்துழைப்பு அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது. இதன் மூலம் வெளிநாட்டில் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் முழுமையான வங்கி சேவைகளை வழங்கும் NDB-யின் “மாணவர் கோப்பு ” (Student File) தீர்வை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த ஒப்பந்தத்தில் NDB வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி பிரத்தியேக வங்கி மற்றும் வாடிக்கையாளர் அனுபவப் பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவர் சஞ்சய பெரேரா மற்றும் சில்லறை வங்கி பிரிவின் துணைத் தலைவர் ஷெயான் ஹமீத் ஆகியோர் கையெழுத்திட்டனர். அதே வேளை AHZ Education Consultants சார்பில் அந்த நிறுவனத்தின் வதிவிட முகாமையாளர் மனுவேல் பிரகாஷ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்த பங்குடைமையின் மூலம், ஐக்கிய இராச்சியத்தில் கல்வி கற்க விரும்பும் இலங்கை மாணவர்கள், AHZ நிறுவனத்தின் பிரிட்டன் பல்கலைக்கழக சேர்க்கை நிபுணத்துவத்தையும் NDB வங்கியின் பாதுகாப்பான மற்றும் திறமையான வங்கி தீர்வுகளையும் ஒருங்கிணைக்கும் முழுமையான சேவைப் பயணத்தை அனுபவிக்க முடியும். NDB-யின் “மாணவர் கோப்பு ” (Student File) திட்டம் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் வழங்குகிறது .இது வெளிநாட்டு பணப்பரி மாற்றங்கள், கணக்கு முகாமைத்துவம் , நிதி ஆலோசனைகள் மற்றும் வெளிநாட்டு கல்விக்கான எளிதான நிதி ஆதரவு போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
AHZ Education Consultants உலகளவில் சிறந்த பெயரைப் பெற்றுள்ளது; இது 130-க்கும் மேற்பட்ட பிரிட்டன் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, 16 நாடுகளிலுள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது. விண்ணப்பம் சமர்ப்பித்தல், விசா செயல்முறை, தங்குமிட ஏற்பாடு முதல் வருகைக்குப் பிறகான ஆதரவு வரை, மாணவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் புதிய கல்வி சூழலுக்கு மென்மையாக மாறிட முழுமையான சேவைகளை AHZ வழங்குகிறது.
இந்தப் பங்குடைமை தொடர்பாக NDB-யின் பிரத்தியேக வங்கி மற்றும் வாடிக்கையாளர் அனுபவத் துணைத் தலைவர் சஞ்சய பெரேரா கூறுகையில், கல்வி என்பது குடும்பங்கள் செய்யக்கூடிய மிகவும் அர்த்தமுள்ள முதலீடுகளில் ஒன்றாகும், மேலும் எமது மாணவர் கோப்பு முன்மொழிவு மூலம் அந்தப் பயணத்தை ஆதரிப்பதில் NDB பெருமை கொள்கிறது. AHZ உடனான எமது பங்குடைமையானது UK உயர்கல்வியில் அவர்களின் ஆழ்ந்த நிபுணத்துவத்தை எமது நம்பகமான நிதி தீர்வுகளுடன் இணைத்து, ஒரு சக்திவாய்ந்த ஒருங்கிணைப்பை உருவாக்குகிறது. மேலும் நாம் இதன்மூலம் வெளிநாட்டுக் கல்விப் பயணத்தை மேலும் தடையற்றதாக மாற்றுவதையும், மாணவர்கள் தமது லட்சியங்களில் முழுமையான மன அமைதியுடன் கவனம் செலுத்துவதை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
தனது கருத்தினை பகிர்ந்து கொண்ட AHZ Education Consultantsநிறுவனத்தின் வதிவிட முகாமையாளர் மானுவல் பிரகாஷ், AHZ-இல் , மாணவர்களை உலகத் தரம் வாய்ந்த UK பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதும், அவர்களின் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் வழிகாட்டுதலைப் பெறுவதை உறுதி செய்வதும் எமது நோக்கமாகும். NDB-யுடன் கூட்டு சேர்வது, எமது ஆலோசனை மற்றும் வேலைவாய்ப்பு சேவைகளுடன் குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும் திறமையான நிதி தீர்வுகளை வழங்குவதன் மூலம் இந்த ஆதரவை மேம்படுத்த அனுமதிக்கிறது. இந்த ஒத்துழைப்பு மாணவர்கள் நம்பிக்கையுடனும் தெளிவுடனும் UK கல்வி பற்றிய அவர்களின் கனவுகளைத் தொடர முடியும் என்பதை உறுதி செய்கிறது.
இந்தப் பங்குடைமையானது , புதுமையான நிதித் தீர்வுகள் மற்றும் மூலோபாய ஒத்துழைப்புகள் மூலம் இலங்கை மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை மேம்படுத்துவதில் NDB இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது, இது சர்வதேச கல்வி வெற்றிக்கான தடையற்ற பாதையை உறுதி செய்கிறது.
இலங்கையில் பட்டியலிடப்பட்ட நான்காவது பெரிய வணிக வங்கி NDB வங்கியாகும். 2025 ஆம் ஆண்டுக்கான யூரோமணி விருதுகளுக்கான சிறப்பு விருதுகளில், SME-களுக்கான இலங்கையின் சிறந்த டிஜிட்டல் வங்கியாக NDB பெயரிடப்பட்டது, மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிய வங்கி மற்றும் நிதி இதழ் (சிங்கப்பூர்) விருதுகளால் ஆண்டின் உள்நாட்டு சில்லறை வங்கி - இலங்கை மற்றும் இலங்கை உள்நாட்டு திட்ட நிதி வங்கி விருதை வென்றது. NDBஆனது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும், இதில் மூலதன சந்தை துணை நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து ஒரு தனித்துவமான வங்கி மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகின்றன. டிஜிட்டல் வங்கி தீர்வுகளால் இயக்கப்படும் அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்த வங்கி உறுதிபூண்டுள்ளது.

