வணிகம்
பிராந்திய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தோடு கொமர்ஷல் வங்கியின் தலைமைத்துவம் பங்களாதேஷ் வங்கியின் ஆளுநரைச் சந்தித்தது

Nov 11, 2025 - 12:26 PM -

0

பிராந்திய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தோடு கொமர்ஷல் வங்கியின் தலைமைத்துவம் பங்களாதேஷ் வங்கியின் ஆளுநரைச் சந்தித்தது

கொமர்ஷல் வங்கியின் தலைவர் திரு. ஷர்ஹான் முஹ்சீன் மற்றும் முகாமைத்துவப்பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சனத் மனதுங்க தலைமையிலான கொமர்ஷல் வங்கியின் நிறுவனத் தலைமைத்துவமானது அண்மையில் டாக்காவில் உள்ள வங்கியின் செயல்பாடுகளைப் பார்வையிட்டதுடன் பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் டொக்டர் அஹ்சன் எச். மன்சூரையும் சந்தித்தது. 

இந்தக் கூட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள், நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் கொள்கைப்போக்கு, பொருளாதார மற்றும் ஒழுங்குமுறைச் சூழல், மேலும் இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் உத்திகள் பங்களாதேஷ் மத்திய வங்கியின் நோக்கங்களுடன் எவ்வாறு இணங்குகிறது என்பதை கருவாகக் கொண்டிருந்தன. மேலும், வங்கியின் பொருளாதார பங்களிப்பை மேம்படுத்துவது, புதிய துறைகளில் விரிவாக்கம், இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள், மாறிவரும் நிதித் துறை நிர்வாக முறைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான மேலதிக ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டன. அத்துடன் பங்களாதேஷ் IFRS (சர்வதேச நிதி அறிக்கை தரநிலைகள்) முறைக்கு மாறும் பணியில், அந்த நாட்டிற்கு ஆலோசனையும் ஆதரவையும் வழங்கவும் கொமர்ஷல் வங்கி இசைந்தது. 

இந்தக் கூட்டத்தில் இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் பங்களாதேஷ் பிரிவு பிரதம நிறைவேற்று அதிகாரி திரு நஜித் மீவனகே மற்றும் பிரதிப் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் நிறுவன வங்கித் துறைத் தலைவர் திரு மஹ்முத் ஹூசைன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது 2003 ஆம் ஆண்டில் Credit Agricole Indosuez நிறுவனத்தின் பங்களாதேஷ் செயல்பாடுகளை கையகப்படுத்தியதன் மூலம் - இது வங்கியின் முதலாவது வெளிநாட்டு கையகப்படுத்தல் - பங்களாதேஷ் சந்தையில் நுழைந்தது. அதன் பின்னர், அந்த நாட்டில் மிகவும் மதிப்புமிக்க வெளிநாட்டு வங்கிகளில் ஒன்றாக வளர்ச்சியடைந்து, தற்போது 20 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 

பங்களாதேஷில் அதன் சிறந்த செயல்திறனுக்காக, இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது பங்களாதேஷின் சிறந்த வெளிநாட்டு வங்கி, மிகவும் நிலைபெறுதகு தன்மை வாய்ந்த வங்கி, சிறந்த பெருநிறுவன வங்கி, சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்கும் வங்கி ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளது. இவற்றைத்தவிர அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளின் வர்த்தகத்துறைசார் முன்னணி இதழ்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்தும் பல்வேறு விருதுகள் மற்றும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. மேலும், வங்கி Credit Rating Information and Services Ltd (CRISL) நிறுவனத்திடமிருந்து 15 ஆண்டுகளாக தொடர்ந்து 'AAA' நீண்டகால கடன் மதிப்பீட்டைத் தக்கவைத்துள்ளது. 

இங்கே காணப்படுவோர் பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநரைச் சந்திக்கும் போது கலந்து கொண்ட இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் பிரதிநிதிகள் குழுவினர்கள் ஆவர். (இடமிருந்து வலப்பக்கம்): இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் பங்களாதேஷ் பிரிவு பிரதம நிறைவேற்று அதிகாரி திரு நஜித் மீவனகே, இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் தலைவர் திரு ஷர்ஹான் முஹ்சீன், பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் அஹ்சான் எச். மன்சூர், இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரி திரு சனத் மனதுங்க மற்றும் பங்களாதேஷ் கொமர்ஷல் வங்கியின் பிரதிப் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் நிறுவன வங்கித் துறைத் தலைவர் திரு மஹ்முத் ஹூசைன்.

Comments
0

MOST READ
01
02
03
04
05