Nov 11, 2025 - 12:42 PM -
0
2025 ஒக்டோபர் 31 அன்று மாலபேயில் உள்ள SLIIT பல்கலைக்கழக வளாகத்தில், VogueFest’25 நிகழ்வை மிகவும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்துள்ள SLIIT Business School, இலங்கையின் நவநாகரிக அரங்கினை பிரமிக்கச் செய்துள்ளது. “உலகளாவிய நவநாகரிக மகத்துவம் மற்றும் கல்வித் திறமையைக் காண்பித்தல்” (Showcasing Global Fashion Excellence and Academic Brilliance) என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு நிகழ்வு இடம்பெற்றதுடன், ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் புதுப்பாணி, அறிவுத்திறன், மற்றும் கலைத்திறன் ஆகியவற்றின் அற்புதமான கொண்டாட்டமாகவே மாறியது. உலகத்தரம் வாய்ந்த அனுபவ ரீதியான கற்றல் மூலமாக, கல்வித்துறையையும், தொழில்துறையையும் ஒருங்கிணைப்பதில் முன்னோடி என்ற தனது நன்மதிப்பை இதன் மூலமாக SLIIT மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
வெறுமனே ஒரு நவநாகரிக காட்சி நிகழ்வு என்பதற்கும் அப்பால், கல்வித் திறமையையும், படைப்பாற்றல் வெளிப்பாட்டையும் இணைக்கின்ற ஒரு கலாச்சார நிகழ்வாக VogueFest மாறியுள்ளது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள Manchester Metropolitan பல்கலைக்கழகத்தின் அங்கமான Manchester Fashion Institute ன் ஒத்துழைப்புடன் வழங்கப்படுகின்ற BSc (Hons) Fashion Business and Management பட்டப்படிப்பை ஊக்குவிப்பதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மூலோபாயத்தை புதுப்பாணியுடன் கலந்தும், கோட்பாட்டுக் கல்வியை படைப்பாக்கத்திறனுடன் கலந்தும் பாரம்பரியமான கற்றல் வழிமுறைக்கும் அப்பால் எவ்வாறு SLIIT கல்வியை வழங்குகின்றது என்பதைக் காண்பித்துள்ளது.
அனைவரையும் வசீகரித்த அணிவகுப்பு நடை படைப்பாக்கங்கள், புத்தாக்கமான ஆடை வடிவமைப்புக்கள், மற்றும் நிகழ்வுகள் கொண்டமாக மாறிய மாலைப்பொழுதானது SLIIT ன் உண்மையான பிரமாண்டத்தைக் காண்பித்ததுடன், நவீன நவநாகரிக தொழில்துறையின் சர்வதேச ஆற்றலையும் பிரதிபலிக்கச் செய்தது. அடுத்த தலைமுறை நவநாகரிக முன்னோடிகளை காண்பித்தது மாத்திரமன்றி, எதிர்கால படைப்பாக்கத்திறன் பொருளாதாரத்தை வளர்ப்பதில் சகல துறைகளிலும் கைதேர்ந்தவர்களாக பட்டதாரிகளை தோற்றுவிப்பதில் SLIIT ன் அர்ப்பணிப்பையும் காண்பித்த இக்கொண்டாட்டத்தில் மாணவர்கள், பழைய மாணவர்கள், மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
Best Designer, Best Male Model, Best Female Model, Most Popular Model போன்ற மதிப்புமிக்க பிரிவுகளின் கீழ் நிகழ்வு இடம்பெற்றதுடன், வளர்ந்துவரும் திறமைசாலிகளுக்கு அங்கீகாரமளிக்கும் போது பொதுமக்களும் தீர்மானம்மிக்க பங்கினை ஆற்றும் வண்ணம் அவர்களின் குரல்களும் செவிமடுக்கப்படுவதை உறுதி செய்து, அரங்கத்தினரின் வாக்களிப்பு மற்றும் சமூக ஊடக ஈடுபாடு ஆகியவற்றின் ஆர்வமூட்டும் இணைப்புடன் “Most Popular” விருதுகளுக்கான வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டனர்.
இம்மாலைப்பொழுதிற்கு நட்சத்திர அந்தஸ்தை அளிக்கும் வகையில், இலங்கையின் நவநாகரிக தொழில்துறையில் மிகவும் புகழ்பூத்தவர்களில் ஒருவரான திருமதி றொஸான் டயஸ் அவர்களின் நெறியாள்கையில் இடம்பெற்ற நிகழ்வு அமையப்பெற்றது. கலைநயம் மிக்க அவரது வழிகாட்டல் மற்றும் தனித்துவமான நேர்த்தி ஆகியன, அணிவகுப்பு மேடைக்கு சர்வதேச மட்டத்திலான கவர்ச்சியை ஏற்படுத்தியதுடன், மறக்க முடியாத மாலைப்பொழுதாக இந்நிகழ்வை மாற்றியுள்ளது. இளம் திறமைசாலிகளுக்கு வலுவூட்ட வேண்டும் என்ற SLIIT ன் இலக்கினை அடிக்கோடிட்டுக் காட்டியவாறு, முன்னேறத் துடிக்கும் படைப்பாற்றல்களுக்கு, பிரகாசிப்பதற்கான வலிமைமிக்க மேடையை அமைத்து, தொழில்துறை தலைவர்களுடன் அறிமுகங்களை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில், Upcoming Designer, Upcoming Model மற்றும் Young Fashion Entrepreneur of the Year உள்ளிட்ட நான்கு பகிரங்கமான போட்டிப் பிரிவுகளை VogueFest’25 அறிமுகப்படுத்தியுள்ளது.
அலங்கார வடிவமைப்பாளர், மணப்பெண் ஆடை வடிவமைப்பாளர், கூந்தல் மற்றும் ஒப்பனைக் கலைஞரான மிஷேல் விஜேசூரிய; தொழில்முறை கலைஞர், ஆடை வடிவமைப்பாளர், மற்றும் ஆடை வடிவமைப்பில் சிரேஷ்ட விரிவுரையாளரான பிரபாத் சமரசூரிய; ஆடை வடிவமைப்பாளரும், Tanash Studios & Atelier ன் தலைமை ஆடை வடிவமைப்பாளருமான திமானி ரொட்றிகோ; இலங்கை மொடலிங் கலைஞரும், உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளரும், மற்றும் தொழில் முயற்சியாளரும், மற்றும் Manhunt International 2025 போட்டியின் மூன்றாம் இடத்திற்கான வெற்றியாளருமான பியூமால் சித்தும்; Naturals சலூன் சங்கிலியின் பணிப்பாளரும், இலங்கை ஒப்பனைக் கலைஞர்களின் சர்வதேச அக்கடமியின் (International Academy of Beauticians in Sri Lanka) ஸ்தாபகருமான ஹசினி குணசேகர; மற்றும் Miss Earth Sri Lanka 2020, Miss Environmental Sri Lanka 2023 பட்டங்களின் முன்னாள் வெற்றியாளரும், மற்றும் Miss International Environmental Pageant போட்டியில் மூன்றாவது இடத்திற்கான வெற்றியாளருமான றொமெய்ன் அல்விஸ் உள்ளிட்ட, நவநாகரிகம், ஆடை வடிவமைப்பு, மற்றும் அழகுக்கலை ஆகிய துறைகளில் இலங்கையில் மிகவும் மதிக்கப்படுகின்ற மற்றும் கைதேர்ந்த தொழில் வல்லுனர்களைக் கொண்ட மதிப்பிற்குரிய நடுவர் குழு நிகழ்வில் நடுவப்பணிகளை முன்னெடுத்தது.
வியப்பூட்டும் ஆடை வடிவமைப்புத் தெரிவுகள் மற்றும் தைரியமான சிந்தனை வெளிப்பாடுகள் வரை, SLIIT ன் வரைவிலக்கணமாகத் திகழும் புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றின் உற்சாக உணர்வை VogueFest’25 எடுத்துக்காட்டியுள்ளது. இந்த நிகழ்வானது வெறுமனே நவநாகரிகத்திற்கான மாலைப்பொழுதாக மாத்திரம் அமைந்துவிடவில்லை. இது கற்றல், தலைமைத்துவம், மற்றும் எல்லையற்ற சாத்தியம் ஆகிய வடிவங்களில் படைப்பாற்றலின் கொண்டாட்டமாக அமையப்பெற்றது. கவர்ச்சி மற்றும் கல்வியின் இலக்கு ஆகியவற்றின் தங்குதடையற்ற கலவையாக, SLIIT ஆனது வெறுமனே பட்டதாரிகளைத் தோற்றுவிப்பது மாத்திரமன்றி, உலகளாவிய நவநாகரிகத்தின் எதிர்காலத்தைச் செதுக்கி வருகின்றது என்பதை VogueFest’25 மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளது.

