மலையகம்
மரகுற்றிகளை ஏற்றிவந்த லொறி 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

Nov 11, 2025 - 02:31 PM -

0

மரகுற்றிகளை ஏற்றிவந்த லொறி 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

பொகவந்தலாவ பலாங்கொடை பிரதான வீதியின் பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் மரக்குற்றில்களை ஏற்றிவந்த லொறி ஒன்று 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

குறித்த சம்பவம் இன்று (11) காலை 10.45 மணியவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மாரத்தென்ன பகுதியில் இருந்து கம்பளை பகுதிக்கு மரக்குற்றிகளை ஏற்றி சென்ற லொறி பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் பெற்றோசோ பகுதியில் வலைவு பகுதியில் பார ஊர்தியின் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த டயர் கீழ் இறங்கியதன் காரணமாக விபத்து இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சம்பவம் இடம்பெற்ற போது லொறியின் சாரதி மாத்திரம் இருந்ததாகவும், சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05