மலையகம்
ஆலயத்திற்குள் சிக்கிய சிறுத்தைப் புலி

Nov 11, 2025 - 03:48 PM -

0

ஆலயத்திற்குள் சிக்கிய சிறுத்தைப் புலி

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருவளி தோட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் சிறுத்தை புலி ஒன்று உயிருடன் சிக்கியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று (11) அதிகாலை ஆலயத்தை திறந்து ஆலயத்தில் உள்ள பணிகளை முன்னெடுப்பதற்கு ஆலயத்திற்கு வந்த குருக்களினால் குறித்த சிறுத்தை இனங்கானப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் ஊடாக நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சிறுத்தை புலியினை பிடிப்பதற்காக வனவிலங்கு அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வந்து சிறுத்தை புலியினை மீட்டு வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டதோடு இது குறித்து மக்கள் எதுவும் அச்சமடைய தேவையில்லை எனவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05