செய்திகள்
2026 வரவு செலவுத் திட்டம் குறித்து Fitch Ratings அறிக்கை

Nov 11, 2025 - 06:06 PM -

0

2026 வரவு செலவுத் திட்டம் குறித்து Fitch Ratings அறிக்கை

இலங்கை அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தாங்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைந்த பின்னர், மத்திய காலத்தில் அரசாங்கத்தின் கடன்/மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தைக் குறைப்பதற்கு அதிகாரிகள் உறுதிபூண்டுள்ளதை இலங்கையின் அண்மைய 2026 வரவுசெலவுத் திட்டம் காட்டுவதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

நீடித்த வலுவான வருமானச் செயற்பாடு, அரசாங்கத்தின் நிதி இலக்குகளை அடைவதற்கு உதவியாக இருக்கும் எனவும், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நிதி மைல்கற்களைத் தொடர்ந்து அடைவது, இலங்கையின் கொள்கை வகுத்தல் குறித்த சாதனையை மேம்படுத்த அதிகாரிகளுக்கு உதவும் எனவும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் குறிப்பிட்டுள்ளது. 

பேரியல் பொருளாதார நிலைத்தன்மையும் நன்மை பயக்கும் என்றும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05