Nov 11, 2025 - 07:10 PM -
0
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 300 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட பாகிஸ்தான் அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அந்த அணி சார்பில் சல்மான் ஆகா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 105 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.
ஹுசைன் தலாத் 62 ஓட்டங்களையும் மற்றும் மொஹமட் நவாஸ் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

