செய்திகள்
ஆசிய தொலைக்காட்சி விருதுகளில் பாடவுள்ள ட்ரீம் ஸ்டார் வெற்றியாளர்

Nov 12, 2025 - 06:16 AM -

0

ஆசிய தொலைக்காட்சி விருதுகளில் பாடவுள்ள ட்ரீம் ஸ்டார் வெற்றியாளர்

தெரணா ட்ரீம் ஸ்டார் 9வது அத்தியாயத்தின் வெற்றியாளரான பெலன் எண்ட்ரியா, 30வது ஆசியத் தொலைக்காட்சி விருதுகள் விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பாடல் ஒன்றை பாட உள்ளார். 

30வது ஆசியத் தொலைக்காட்சி விருதுகள் விழா இந்த மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ளது. 

இந்த நிகழ்வில், அவர் தனது சொந்தப் பாடல் ஒன்றை ஒரு சர்வதேச மேடையில், சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் பாடவுள்ளார். அவர் தனது சொந்தப் பாடலை சர்வதேச அரங்கில் பாடுவது இதுவே முதல் முறையாகும். 

இந்த வாய்ப்பு தனது "கனவு நனவான தருணம்" என்று பெலன் எண்ட்ரியா தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

30வது ஆசியத் தொலைக்காட்சி விருதுகள் விழா, ஆசியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடகத் துறையில் சிறந்த மற்றும் பிரபலமான படைப்புகளை அங்கீகரிக்கும் விருது வழங்கும் விழாவாகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05