Nov 12, 2025 - 02:11 PM -
0
இலங்கையின் முன்னணி Boutique மக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்பாடல்கள் முகவர் நிறுவனமான Mark and Comm (Pvt) Ltd, பரந்த மூலோபாய தொடர்பாடல்கள் மற்றும் மக்கள் ஒருங்கிணைப்பு கட்டமைப்பை டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரட்னவிடம் கையளித்துள்ளது.
முகாமைத்துவ பணிப்பாளர் தன்சில் தாஜுதீன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த விளக்கமளிப்பின் போது, பொது மக்களின் நம்பிக்கையை வெல்வது, பங்காளர் புரிதல் மற்றும் நிலைபேறான பின்பற்றல் போன்றவற்றுடன் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. சிங்கப்பூரின் “ஸ்மார்ட் தேசம்” முன்னெடுப்பு அடங்கலாக சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளான எஸ்டோனியாவின் e- ஆளுகை தலைமைத்துவம், மலேசியாவின் டிஜிட்டல் பொருளாதார ப்ளுபிரின்ட் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா நிகழ்ச்சித் திட்டம் போன்றவற்றை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்ட விளக்கத்தின் போது, டிஜிட்டல் நிலைமாற்ற செயற்பாடுகளின் வெற்றி, டிஜிட்டல் மூலோபாயத்தின் தொடர்பாடல் மூலோபாயத்தில் தங்கியுள்ளமை தொடர்பான விளக்கங்கள் பிரதி அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்தன.
பரந்த கட்டமைப்பினூடாக நான்கு முக்கியத்துவம் வாய்ந்த பெறுபேறுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தன. வகைப்படுத்தப்பட்ட பங்காளர் தகவல் வழங்கல்களினூடாக பொது புரிதலை கட்டியெழுப்பல், அரச தலைமைத்துவம் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு பாதுகாப்பு ஆகியவற்றில் நம்பிக்கையை கட்டியெழுப்பல், டிஜிட்டல் சேவைகளை பின்பற்றலை முன்னெடுத்தல் மற்றும் சர்வதேச முதலீடுகள் மற்றும் திறமைகளை ஈர்த்தல் போன்றன அவற்றில் அடங்கியிருந்தன.
பிரதான அங்கங்களில், பங்காளர்களுக்கான தகவல் உட்கட்டமைப்பு, PESO மாதிரியை பயன்படுத்தி ஒழுங்கிணைக்கப்பட்ட பன்னாளிகை ஊடக பிரயோகம், சூழ்நிலை நெருக்கடித் தொடர்பு கோட்பாட்டின் (SCCT) அடிப்படையில் அமைந்த நெருக்கடித் தொடர்பு நெறிமுறைகள், மூலோபாய ஊடக உறவுகளை உருவாக்குதல், நிகழ் நேர மனநிலை கண்காணிப்பு, அரசு அதிகாரிகளுக்கான சிந்தனைத் தலைமை நிலைப்படுத்தல், விரிவான உள்நாட்டுத் தொடர்புகள், மற்றும் பார்சிலோனா கோட்பாடுகள் 3.0-ஐப் பயன்படுத்தி விளைவு அடிப்படையிலான அளவீடு ஆகியன.
இந்த விளக்கமளிப்பின் போது தாஜுதீன் குறிப்பிடுகையில், “உலகின் சிறந்த டிஜிட்டல் உட்கட்டமைப்புகளை கட்டியெழுப்ப முடியும், ஆனாலும் மக்கள் அதில் நம்பிக்கை கொள்ளாவிடின், அதைப் பற்றிய புரிதலை கொண்டிராவிட்டால் அல்லது அதன் மீது தலைமைத்துவத்தின் அர்ப்பணிப்பில் நம்பிக்கை கொள்ளாவிடின், பின்பற்றல் தடைப்பட்டு எதிர்ப்புகள் வலுக்க ஆரம்பிக்கும். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இந்த சவாலை நாம் பல நாடுகளில் அவதானித்துள்ளோம். டிஜிட்டல் நிலை மாற்றம் என்பது தொழில்நுட்ப செயற்திட்டமல்ல, முகாமைத்துவ மாற்ற சவாலாகும், இது ஒவ்வொரு குடிமகன், வியாபாரம் மற்றும் அரச முகவரமைப்புடனும் தொடர்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.” என்றார்.
அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை எய்துவதில் தொடர்பாடல்களின் முக்கியத்துவத்தை பிரதி அமைச்சர் எரங்க வீரரட்ன ஏற்றுக் கொண்டு குறிப்பிடுகையில், “சர்வதேச டிஜிட்டல் நிலை மாற்ற வெற்றிகரத் தன்மையை மற்றும் தோல்விகளை அவதானித்து, உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மாத்திரம் போதுமானதல்ல என்பது பற்றி நாம் பாடங்களை கற்றுக் கொண்டுள்ளோம். பொது மக்களின் நம்பிக்கை, தெளிவான தகவல் மற்றும் சகல தரப்பினருடனும் வெளிப்படையான ஈடுபாடு போன்றன அத்தியாவசியமான தேசிய சொத்துகளாகும். Mark and Comm நிறுவனத்தின் தாஜுதீன் வழங்கிய இந்த பரந்த விளக்கத்தினூடாக, இலங்கையில் முன்னெடுக்கவுள்ள பெருமளவு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், பொது மக்களினால் பின்பற்றப்படுகின்றமை மற்றும் நிலைபேறான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துவதில் பங்களிப்புச் செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய அவசியமான செயற்பாடுகள் பற்றிய விளக்கங்களை வழங்கியுள்ளது.” என்றார்.
முன்மொழியப்பட்ட கட்டமைப்பு ஒரு கட்டம் வாரியான செயல்படுத்தல் சாலைத் திட்டத்தை உள்ளடக்கியது; இது உடனடி பங்குதாரர் வரைபடம் மற்றும் செய்தி கட்டமைப்பை உருவாக்குவதில் தொடங்கி, அதனைத் தொடர்ந்து கண்காணிப்பு அமைப்புகளை நிறுவுதல் மற்றும் செய்தி தொடர்பாளர் பயிற்சி அளித்தல் ஆகியவற்றின் மூலம், முழுவதுமான அனைத்து டிஜிட்டல் பொருளாதார முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கும் விதமாக, மூலோபாயத் தொடர்புகளின் ஒரு நிலையான தாளத்திற்கு உயரும்.
Mark and Comm இலங்கையின் முன்னணி Boutique மக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்பாடல்கள் நிறுவனமாகும். இது மக்கள் ஒருங்கிணைப்பு தலைமையிலான யோசனைகள் மற்றும் வியூகங்களுக்காகப் புகழ்பெற்றது. GlobalCom PR வலையமைப்பின் 100-க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய அதன் சர்வதேச வலையமைப்பு, PRCA APAC கூட்டு நிறுவன உறுப்புரிமை மற்றும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடனான பிரத்தியேகமற்ற இணைப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 2011-இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், அதன் சுறுசுறுப்பான Boutique மாதிரி மற்றும் மூலோபாய ஆலோசனை அணுகுமுறைக்காக அறியப்படுகிறது. மேலும், பல்வேறு தொழில் துறை முயற்சிகள் மூலம் இலங்கையின் மக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் ஊடகத் தரங்களை உயர்த்துவது உட்பட, தொழில் துறைத் தலைமை மற்றும் ஆதரவுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

