Nov 12, 2025 - 02:52 PM -
0
தெற்காசியாவில் முன்னணி மின்-வர்த்தக (e-commerce) தளமான Daraz, 2018ல் ஸ்தாபிக்கப்பட்ட அதன் விநியோகப் போக்குவரத்து அங்கமான Daraz Express (DEX) வழங்கும் இறுதிக்கட்ட விநியோகத் தீர்வை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கின்றமை குறித்து மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. தனது தளத்தில் இல்லாத வர்த்தகநாமங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு வலுவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட இச்சேவை, இலங்கை எங்கிலும் விரைவான, நம்பிக்கை மிக்க, மற்றும் தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்படுகின்ற விநியோக போக்குவரத்து ஆதரவை வழங்குகின்றது. அதிவிரைவான, பாதுகாப்பான, மற்றும் நம்பத்தகுந்த விநியோக வலையமைப்பை வழங்கும் DEX, வணிகங்கள் தமது தயாரிப்புக்கள் மீது கவனம் செலுத்தி, தமது செயல்பாடுகளை நம்பிக்கையுடன் விரிவுபடுத்துவதற்கு இடமளிக்கின்றது.
சந்தையில் காணப்படும் கணிசமான இடைவெளிக்குத் தீர்வு காணும் வகையில், இவ்வாறு நீட்டிக்கப்பட்டுள்ள DEX சேவையானது Daraz தளத்திற்குப் வெளியிலுள்ள வர்த்தகநாமங்கள் மற்றும் விற்பனையாளர்கள் உலகத்தரம் வாய்ந்த விநியோக போக்குவரத்து மற்றும் வழங்கல் சேவைகளின் அனுகூலத்தைப் பெற்றுப்பயன்பெற இடமளிக்கும். செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வழித்தட திட்டமிடல், முன்கணிப்புடனான பகுப்பாய்வு, மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு மூலமாக விரைவான, துல்லியமான, மற்றும் வெளிப்படையான தீர்வை DEX வழங்கும் அதேசமயம், அதன் வலிமைமிக்க API ஒருங்கிணைப்பு மற்றும் Shopify, WooCommerce, மற்றும் Magento போன்ற முன்னணி வர்த்தகத் தளங்களுடனான பொருத்தப்பாடு இத்தளங்களை தங்குதடையின்றி உள்வாங்கிக் கொள்ள உதவுகின்றது. வணிகர்கள் அதிக எண்ணிக்கையான கோரல்களைப் பெற்று, விரைவாக விரிவுபடுத்திக் கொள்ள உதவும் வகையில் விநியோகத்தின் போது பணத்தைப் பெற்றுக்கொள்ளும் தெரிவுகளின் துணையுடன், 12 மணி நேரம் என்ற விரைவான காலப்பகுதிக்குள் இலங்கை எங்கிலும் பொதிகளைத் திறன்மிக்க வழியில் விநியோகிப்பதற்கு DEX ன் திறன்மிக்க பணிப்பாய்வுகள் இடமளிக்கின்றன.
300 க்கும் மேற்பட்ட உச்ச உள்ளூர் வர்த்தகநாமங்களின் நம்பிக்கையை வென்றுள்ள DEX ஆனது, இலங்கையின் நவநாகரிக மற்றும் அழகுப் பராமரிப்புத் துறைகள் மத்தியில் வலுவான பிரசன்னத்தைக் கட்டியெழுப்பியுள்ளது. புள்ளி விபரங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் உச்சமயமாக்கமானது செயல்பாட்டுத் திறனை மேலும் மேம்படுத்துவதுடன், உள்ளூர் விநியோகங்களை 24 மணி நேரத்தினுள்ளும், மாகாணங்களுக்கு இடையிலான விநியோகங்களை 72 மணி நேரத்தினுள்ளும் பெற்றுக்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு இடமளித்து, 90% க்கும் மேற்பட்ட வெற்றிகரமான விநியோக வீதத்தைக் கொண்டுள்ளது.
விற்பனையாளர்களின் பணப்புழக்கத்தை வலுப்படுத்தும் முகமாக, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் விநியோகத்தின் போது பணம் (Cash on Delivery - COD) என்ற அடிப்படையில் கொடுப்பனவுகளை வழங்கும் DEX, நிகழ்நேர கொடுப்பனவு தெரிநிலை மூலமாக, விரைவான வணிக மீள்முதலீடு மற்றும் வளர்ச்சிக்கு இடமளிக்கின்றது.
“தெற்காசியாவின் மத்தியில் இறுதிக்கட்ட விநியோகத்திற்கு DEX மீள்வரைவிலக்கணம் வகுக்கின்றது,” என்று Daraz குழுமத்தின் பிரதம விநியோகப் போக்குவரத்து அதிகாரி அஹமத் தன்வீர் அவர்கள் குறிப்பிட்டார். “பாரியளவிலான இணைய வழி சில்லறை விற்பனையாளர்களானாலும் சரி அல்லது வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற சுயாதீன விற்பனையாளர்களானாலும் சரி, விரைவான, நம்பிக்கையான, மற்றும் புள்ளி விபரங்களால் முன்னெடுக்கப்படுகின்ற விநியோக பெறுபேற்றுத்திறனை DEX உறுதி செய்கின்றது. விநியோகப் போக்குவரத்தை எளிமைப்படுத்தி, வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தி, மற்றும் மின்-வர்த்தகத் தொழிற்துறை மத்தியில் நிலைபேண்தகு வளர்ச்சிக்கு வலுவூட்டுகின்ற விநியோகக் கட்டமைப்பைத் தோற்றுவிப்பதே எமது இலக்கு.”
தனது வியாபாரத்தில் DEX ஏற்படுத்தியுள்ள நல்விளைவு குறித்து Hemas E-Store சுட்டிக்காட்டியுள்ளதுடன், Daraz Express உடன் கைகோர்த்தமை தனது சேவைகளை நிறைவேற்றும் திறனைப் பரிணமிக்கச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. குறித்த நேரகாலத்தில் விநியோகங்கள், நிகழ்நேர கண்காணிப்பு, மற்றும் செயல்திறன் மிக்க தொடர்பாடல் ஆகியவற்றுடன், வாடிக்கையாளர்கள் தமது ஆர்டர்களை குறித்த நேரத்தில் பெற்றுக்கொள்ள வழிவகுத்து, அவர்கள் மத்தியில் திருப்தியை மேம்படுத்தி, மூன்று மாதங்களினுள் 25% க்கும் மேலாக தனது இணைய வழி விற்பனையை வளர்ச்சி பெறச் செய்வதற்கு வர்த்தகநாமத்திற்கு உதவியுள்ளது. Hemas E-Store தனது வர்த்தகநாமங்கள் மத்தியில் மின்-வர்த்தகத்தில் வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற வர்த்தகநாமங்களுக்கான மிகவும் பொருத்தமான விநியோகப் போக்குவரத்து கூட்டாளராக DEX ஐ உள்வாங்கியதன் மூலமாக அதன் புள்ளி விபரங்களின் துணையுடனான நுண்ணறிவுகள், மற்றும் தங்குதடையின்றிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அனுகூலங்களைப் பெற்றுள்ளது.
இலங்கையில் புவியியல் ரீதியாக 100% இடங்களை உள்ளடக்கிய பரந்த விநியோகப் போக்குவரத்து வலையமைப்பை DEX கொண்டுள்ளது. இத்தீர்வின் மூலமாக வணிகங்கள் பரந்தளவில் சந்தைகளை எட்டி, வியாபாரச் செயல்பாடுகளை எளிமைப்படுத்தி, பிராந்திய மின்வர்த்தகக் கட்டமைப்பிற்கு வலுவூட்டுவதே DEX ன் நோக்கமாகும். எங்கிருந்தும் வியாபார நடவடிக்கைகளை இலகுபடுத்துவதால், தெற்காசியாவில் புத்தாக்கம், இணைப்புத்திறன், மற்றும் பொருளாதார வாய்ப்புக்களை முன்னெடுக்கும் Daraz ன் இலக்கினை DEX தொடர்ந்து முன்னெடுக்கின்றது.
DEX இறுதிக்கட்ட விநியோகத் தீர்வு குறித்த மேலதிக விபரங்களுக்கு, www.dex.com.lk என்ற DEX ன் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.
Daraz குழுமம் குறித்த விபரங்கள்
2015 ல் ஸ்தாபிக்கப்பட்ட Daraz, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் முன்னிலை வகிக்கும் e-commerce தளமாகத் திகழ்ந்து வருகின்றது. 500 மில்லியன் சனத்தொகையுடன், மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற பிராந்தியத்தை இலக்கு வைத்து, அதிநவீன சந்தைப்பரப்பு தொழில்நுட்பத்துடன், விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் என இரு தரப்பினருக்கும் வலுவூட்டுகின்றது. e-commerce, விநியோக வழங்கல் ஏற்பாடு, கொடுப்பனவு மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பொன்றைக் கட்டியெழுப்பி, ஈர்க்கின்ற, தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட கொள்வனவு அனுபவத்தை வழங்கி, வர்த்தகத்தின் ஆற்றல் மூலமாக தெற்காசிய சமூகங்களை மேம்படுத்துவதே நிறுவனத்தின் நோக்கம்.
மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள தயவு செய்து www.daraz.com என்ற இணையத்தளத்தை நாடுங்கள் அல்லது நிறுவனம் குறித்த தகவல் விபரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள LinkedIn மூலமாக Daraz உடன் இணைப்பில் இருங்கள்.
Daraz Express குறித்த விபரங்கள்
2018 ல் ஸ்தாபிக்கப்பட்ட Daraz Express (DEX), பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் முழுமையான விநியோகம், களஞ்சியப்படுத்தல், மற்றும் நிறைவேற்றும் தீர்வுகளை வழங்கும் சேவைகளுடன் Daraz ன் உரிமையாண்மையைக் கொண்ட விநியோகப் போக்குவரத்து அங்கமாகத் திகழ்ந்து வருகின்றது. விரைவான மற்றும் துல்லியமான சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் முழுமையான அர்ப்பணிப்புடன், மாதந்தோறும் பல மில்லியன் கணக்கான விநியோகங்களுக்கு DEX வலுவூட்டுவதுடன், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு மகத்துவம் ஆகியவற்றினூடாக தொடர்ந்தும் புத்தாக்கத்தை முன்னெடுத்து வருகின்றது.
மேலதிக விபரங்களுக்கு தயவு செய்து பின்வரும் இணைப்பைப் பார்க்கவும்: www.dex.com.lk

