இந்தியா
பாலத்தில் அடுத்தடுத்து 8 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து - 7 பேர் உயிரிழப்பு

Nov 14, 2025 - 08:07 AM -

0

பாலத்தில் அடுத்தடுத்து 8 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து - 7 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நேற்று மாலை பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. 

பாலம் ஒன்றில் 8 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

20 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து பொலிஸார் கூறுகையில், சத்தாராவில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று, பிரேக் செயலிழந்ததால் நவாலே பாலத்தின் சரிவில் மாலை 5.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்தது. 

அந்த லொறி வழியில் பல வாகனங்களை மோதியது. இதில் ஒரு கார் லொறிக்கும், முன்னால் சென்ற கண்டெய்னர் லொறிக்கும் இடையில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது 

இதனையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைத்து, சேதமடைந்த கார் மற்றும் கண்டெய்னரில் இருந்து சடலங்களை மீட்டனர். 

உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதே பகுதியில் பிரேக் பிடிக்காத லொறி ஒன்று 48 வாகனங்களை இடித்து விபத்தை ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05