செய்திகள்
சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த திட்டம்

Nov 14, 2025 - 02:29 PM -

0

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த திட்டம்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

சுவசெரிய நிதியத்தின் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களின் திறன் மேம்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பயிற்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
 

இதற்குத் தேவையான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும், உலகில் கிடைக்கும் சமீபத்திய தொழில்நுட்பத்தை இணைத்து இந்த நோயாளர் காவு வண்டி சேவையை புதுமைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார். 

மேலும் 100 நோயாளர் காவு வண்டிகளை வாங்குவதற்கு இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அதனை தவிர ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன் உதவியின் கீழ் 20 நோயாளர் காவு வண்டிகளும் அனபளிப்பாக மேலும் 25 நோயாளர் காவு வண்டிளையும் பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Comments
0

MOST READ