Nov 14, 2025 - 04:16 PM -
0
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 15 மற்றும் 16-ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
மேலும் ஒவ்வொரு அணியும் தங்களது பயிற்சியாளர் குழுவை மாற்றியமைத்து வருகின்றனர்.
அந்த வகையில் கொல்கத்தா அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த பாரத் அருண் நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டிம் சவுதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயரும் உதவி பயிற்சியாளர் ஷேன் வொட்சனும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

