Nov 14, 2025 - 06:34 PM -
0
நானுஓயா கிரிமிட்டி தேர்தல் தொகுதி சமர்செட் கார்லபேக் தோட்டத்தில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக தோட்டத் தொழிலாளர்கள் இன்று (14) விசேட பூஜை செய்து பாற்சோறு சமைத்து மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்கள் 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 1,750 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியோரத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்கு முன்பாக விசேட பூஜை செய்து தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றினைந்து பாற்சோறு சமைத்து மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர்.
இதில் கலந்துகொண்டு தொழிலாளர்கள் கூறுகையில் இதுவரை வந்த அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதன் படி ஏதும் நடக்கவில்லை எனவே தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதன் படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,750 ரூபாய் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றோம்.
கடந்த காலத்தில் சம்பள உயர்வு விடயத்தில் இழுத்தடிப்பு செய்தவர்கள் எதிர் கட்சியீனர் தற்போது அதிகரிக்கப்பட்ட சம்பளத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் இவ்வாறு எங்களை பல இடங்களில் புறக்கணிக்காதீர் எனத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
--

