Nov 15, 2025 - 09:34 AM -
0
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (14) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட சிறுமி மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்காக கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

