கிழக்கு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திருட்டு - 18 தொலைபேசிகள் மீட்பு!

Nov 15, 2025 - 02:24 PM -

0

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திருட்டு - 18 தொலைபேசிகள் மீட்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் தாதியர்கள், வைத்தியர்கள் உட்பட பலரின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணம் என்பவற்றை திருடி வந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரையும் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் உட்பட இருவரை கடந்த 13 ஆம் திகதி இரவு ஏறாவூரில் வைத்து கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட 18 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு உதவியாக இருந்த பெண் ஒருவரின் கைப்பையில் வைத்திருந்த கையடக்க தொலைபேசி மற்றும் 10,000 ரூபா பணத்துடன் கைப்பை திருட்டு போயுள்ளது தொடர்பாக கடந்த 2 தினங்களுக்கு முன் மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து இருந்தனர். 

இதனையடுத்து குறித்த திருட்டு தொடர்பாக சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரதீப் பெர்னார்ந்தே தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் ஏறாவூர் பிரதான வீதியில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் இளைஞன் ஒருவர் 5 கையடக்க தொலைபேசிகளை கொண்டு சென்ற அதன் இரகசிய இலக்கம் கொண்ட பூட்டு உடைத்து தருமாறு அந்த கடை உரிமையாளரிடம் வழங்கியுள்ளார். 

இது தொடர்பாக மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, உடனடியாக சம்பவ தினமான 13 ஆம் திகதி முற்றுகையிட்ட பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்து விசாரணையின் போது குறித்த தொலைபேசிகளை மட்டு போதனா வைத்தியசாலையில் திருடி உள்ளதாக தெரிய வந்துள்ளதையடுத்து, கடை உரிமையாளர் உட்பட இருவரையும் கைது செய்ததுடன் திருடப்பட்ட 18 கையடக்க தொலைபேசிகள் மற்றும் கணினி ஒன்று உட்பட உபகரணங்களை மீட்டனர். 

இவ்வாறு கைது செய்தவர்களை மட்டு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து ஏறாவூர் மிச் நகரைச் சேர்ந்த 23 வயதுடைய குறித்த இளைஞன் கிழமையில் ஒரு நாள் வைத்தியசாலைக்குள் நுழைந்து வாட்களில் தங்கியிருக்கும் நோயாளர்கள் மலசல கூடம் செல்லும் போது அவர்களின் கையடக்க தொலைபேசி பணம் மற்றும் நோயாளிகளுக்கு உதவியாக இருப்பார்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட பலரின் கையடக்க தொலைபேசிகளை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக திருடி வந்துள்ளதாகவும், அதை ஏறாவூரில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை மற்றும் திருத்தம் குறித்த கடையில் கொடுத்து கையடக்க தொலைபேசியின் இரகசிய இலக்கம் கொண்ட பூட்டை உடைத்த பின்னர் அதனை விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05