Nov 15, 2025 - 10:06 PM -
0
நெடுந்தீவுப் பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு 9 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள பாவனையற்ற காணியில் இருந்தே மேற்படி துப்பாக்கி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (14) இரவு மேற்படி துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், குறித்த துப்பாக்கி இன்று ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சான்றுப் பொருளாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--

