Nov 16, 2025 - 06:20 AM -
0
கடந்த நாட்களில் திஸ்ஸமஹாராம, கிரிந்த பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகையை இலங்கைக் கடற்பகுதிக்குக் கடத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் பல்நாள் மீன்பிடிப் படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் மாத்தறை அலுவலக அதிகாரிகளால் நேற்று (15) தங்காலைில் வைத்து இந்த படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படகுடன் ஐந்து சந்தேகநபர்களும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

