விளையாட்டு
ஆப்பிரிக்காவில் முதல் கோலை அடித்த மெஸ்சி!

Nov 16, 2025 - 02:19 PM -

0

ஆப்பிரிக்காவில் முதல் கோலை அடித்த மெஸ்சி!

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அங்கோலா நாட்டின் 50-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி உலக கால்பந்து செம்பியனான அர்ஜென்டினா அணியை காச்சி கால்பந்து போட்டியில் விளையாட அழைக்கப்பட்டிருந்தது. 

இந்தப் போட்டியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி 44-வது நிமிடத்தில் கோலும் அடித்தார். 

இதன்மூலம் ஆப்பிரிக்க மண்ணில் தனது முதல் கோல் அடித்து மெஸ்சி அசத்தினார். மொத்தமாக அவர் 895 கோல்கள் அடித்துள்ளார். 401 கோல்களை அடிக்க உதவியுள்ளார். 

ஐரோப்பா கண்டத்தில் தான் மெஸ்சி அதிகபட்சமாக 714 கோல்களை அடித்து உள்ளார். ஸ்பெயினில் 624, பிரான்சில் 34, இங்கிலாந்தில் 9, ஜெர்மனி, சுவிட்சர்லாந்தில் தலா 6 கோல்களும் அடித்துள்ளார். 

ஆசியாவில் 22 கோல்கள் அடித்துள்ளார். 2022 உலகக் கிண்ணம் நடந்த கட்டாரில் 8 கோல்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல், ஜப்பானில் தலா 3 கோல்களும் அடித்து உள்ளார். 

அமெரிக்க கண்டத்தில் 156 கோல்கள் அடித்து உள்ளார். அமெரிக்காவில் 92, அர்ஜென்டினாவில் 37 கோல்கள் அடித்தார். கிளப் போட்டிகளில் அவரது சொந்த மண்ணில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05