Nov 16, 2025 - 04:04 PM -
0
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இன்றைய 3ஆவது நாள் தேனீர் இடைவேளைக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் துடுப்பாட்ட வீரர்கள் கடுமையாக திணறினர்.
2ஆவது இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா அணியின் தலைவர் பவுமா மட்டும் அரைசதம் அடித்தார்.
முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 159 ஓட்டங்களில் சுருண்ட நிலையில், இந்தியா 189 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
2ஆவது இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 153 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்நிலையில் 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பாடிய இந்திய அணி 93 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் இந்தியாவை கடந்த 15 வருடத்திற்கு பின் வீழ்த்தியுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் முதல் இன்னிங்சில் 30 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
2ஆவது இன்னிங்சில் 21 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
8 விக்கெட்டுக்களை வீழ்த்திய அவர் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

